Posts Mentioning RSS Toggle Comment Threads | Keyboard Shortcuts

  • srivaishnavan 10:13 am on December 28, 2007 Permalink | Reply  

    கம்பரின் கவியமுதம்

    அஞ்சிலே ஒன்று பெற்றான்அஞ்சிலே ஒன்றைத்தாவி

    அஞ்சிலே ஒன்று ஆறு ஆகஆர் உயிர் காக்க ஏகி

    அஞ்சிலே ஒன்று பெற்ற

    அணங்கைக்கண்டு அயலார் ஊரில்அஞ்சிலே ஒன்றை வைத்தான்அவன் நம்மை அளித்துக்காப்பான்

    பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய வாயுதேவனுக்குப்பிறந்த அனுமன்

    பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய ஆகாயமார்க்கமாகப்

    பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய நீரைக் (கடலைக்)கடந்து சிறந்த உயிரைக்காக்கும் பொருட்டு சென்று
    பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய பூமிதேவி பெற்ற தெய்வமாதை(சீதாதேவியை)பார்த்து சத்ருக்களின்இலங்கைமாநகரில் பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய தீயை வைத்தான்.

    அவன் நம் எல்லோரையும் கருணையுடன் காப்பாற்றுவான்.

     
    • Srikanth 5:25 pm on December 31, 2007 Permalink | Reply

      கம்ப நாட்டாழ்வாரின் பிரசித்தமான இந்த பாசுரம் சிந்தித்து அனுபவிக்க தெவிட்டாது.

    • srivaishnavadharmam 6:20 pm on January 30, 2008 Permalink | Reply

      Hello! Am really happy to see a such a nice blog on Sri Vaishnavam. My heart-felt wishes. Kindly visit the following blog and leave your valuable comments.
      http://ramanujadasan.wordpress.com/

    • N.Rajagopalan 9:14 am on April 5, 2008 Permalink | Reply

      i am glad to read the best dyana sloka on Lord Hanuman. May Lord Hanumon shower his blessings on us!

  • srivaishnavan 3:30 am on December 28, 2007 Permalink | Reply  

    ஆண்டாள் நோய்க்குத் தோழி சொன்ன மருந்து

    1. நாராயணா வென்று பாராயணம் செய்யா நாவிருந்தும் வீணே !

    2. சராசரங்கள் அறியா மூடர் தழைத்திருந்தும் வீணே !3. தேஹாபிமானம் விடாதவர்கள் செய்யும் ஜெபதபங்கள் வீணே ! 4. போகசுகம் தன்னை நினைத்துச் செய்யும் பக்தி பூஜை யாவும் வீணே !5. நறுந்துழாய் இல்லாத் திருவாராதனம் பல நாளும் செய்தும் வீணே !

    6. விருந்துடன் இருந்து அமுது அருந்தாதவனுரை வீடு வாசலும் வீணே !7. மணவாளனுடன் தினம் எதிர்த்துப் போராடும் மனைவியிருந்தும் வீணே !8. குணவான் என மேலார் உரைத்திட நடவாத குமரன் இருந்தும் வீணே !9. மனு நீதி பிசகிடும் குடிகளை வருத்திடும் மன்னன் இருந்தும் வீணே !

    10. காரணவஸ்துவை விட்டுப் பல தெய்வம் தொழுவதும் வீணே !11. தரணியில் ஹரிப்ரீதி இல்லாதவன் செய்யும் தர்மம் யாவும் வீணே ! 12.

    தரணியில் உலுத்தராய் வீணருக்குழைத்து சரீரம் வளர்ப்பதும் வீணே !13.பாரினில் ஆழ்வார்கள் அருளிச்செய்யா நூலைப் படிப்பதும் வீணே !14.நாரியரில் மிக்க நற் செய்கையில் லாதார் அழகாயிருந்தும் வீணே !

     
    • vijayalakshmi s. 4:25 am on December 29, 2007 Permalink | Reply

      Wonderful excellent preaching by Andal. each and every human being must follow. else, its deadly waste to survive as SriVaishnavas

      Namo Narayana

      vijayalakshmi s.

  • srivaishnavan 2:02 pm on December 15, 2007 Permalink | Reply  

    Lesser known or Unknown anecdotes about Sri Vaishnava Sampradayam 

    கோரத மூலை பெயர்க்காரணம்

    ஸ்ரீரங்கவாசிகள் அனைவரும் கோரத மூலை என்னும் இடத்தை கேள்விப்பட்டிருப்பர்.அதற்கான பெயர்க்காரணம்

    ராமானுசர் தினமும் திருக்கொட்டாரத்துக்குச் சென்று அங்குள்ள பசுக்களைத் தம்முடைய திருக்கையால் தடவிக்கொடுப்பார் .அப்பொது பசுக்களுக்கு ஏதேனும் வ்யாதி இருந்தால் உடனே கண்டு பிடித்திடுவார் .வ்யாதியால் அவதியுறும் பசுக்களுக்கு கோபாலர்களைக் கொண்டு மருத்துவ சிகிச்சை அளித்திடுவார் .நோயினால் விலகிய பசுக்களின் எண்ணிக்கையை சரி செய்வதற்காக ஸ்ரீரங்கம் கீழச் சித்திரை வீதியில் உள்ள கோசாலையிலிருந்து மாற்றுப்பசுக்களை ஏற்பாடு செய்வார் ராமானுசர் .இந்த நிகழ்ச்சி நமக்கெல்லாம் ராமானுசரின் பரந்த வைத்ய சாஸ்த்ர அறிவையும் , வருமுன் காக்கும் திறனையும் நன்கு புலப்படுத்துகிறது .

    கோசாலை வட கிழக்கு மூலையில் இருந்த காரணத்தால்தான் அந்த இடத்துக்கு கோ மூலை எனப் பெயர் ஏற்பட்டது. பங்குனி உத்ஸவத் தேர் அங்கிருந்து புறப்படுவதால் கோரதம் என்றழைக்கப்படுகிறது.

     
  • srivaishnavan 6:27 am on December 14, 2007 Permalink | Reply  

    Lesser known or Unknown anecdotes about Sri Vaishnava Sampradayam 

    இன்று முதல் நம்பெருமாள் சோறு ஸுமவாமல் இருப்பர்

    உடையவர் திருவரங்கத்தில் எழுந்தருளியிருந்த காலத்தில் ஒரு கல்தச்சன் தனது கோசாலையை நடத்தி வரும்போது ஒரு கல்லைப் பிளக்க அந்தக் கல்லின் நடுவில் தண்ணீரும் தேரையும் இருந்தது கண்டு மிகவும் ஆச்சர்யப்பட்டான்.ஒரு கல்லின் நடுவில் இருக்கும் தேரைக்கு வாழ்வளிக்கும் பெருமாள் நமக்கும் வாழ்வளிப்பார் என்ற எண்ணத்துடன் தன்னுடைய குடும்பப் பொறுப்புகள் அனைத்தையும் விட்டு எல்லாம் பெருமாள் செயல் எனக் கோயில் வாழ் சோம்பராய் ஒரு மரத்தடியில் அமர்ந்து எந்த வேலையும் செய்யாமல்

    வாழ்ந்து வந்தான் .

    இப்படியாகத் தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றும் பொறுப்பு பெருமாளுடையது என்னும் உறுதிப்பாட்டுடன் கல்தச்சன் வாழ்ந்து வந்த காலத்தில் , ஒவ்வொரு நாளும் அழகியமணவாளன் தமக்குக் கண்டருளப்பட்ட திருவொத்த சாதத்தை (அரவணையை) தானே தன் தலையில் சுமந்து சென்று அந்தக் கல்தச்சனுக்கும் அவன் குடும்பத்துக்கும் உணவாக அளித்துவந்தான் .சில நாட்களுக்குப் பின் அந்தக் கல்தச்சன் இறந்து விட்டான் .அப்போது அவன் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்வதற்காக ராமானுசர் அவன் வீட்டுக்குப் போனபோது , அவனுடைய மனைவிஇன்றுவரை எங்களுக்குக் எந்தக் குறையுமில்லாமல் உணவு கொடுத்தனுபினீர் .இப்போது என் கணவனும் இறந்து விட்டான் . அதற்காக சோறு அனுப்புவதை உடனே நிறுத்தி விடாதீர்கள்என் குழந்தைகள் பசியோடிருக்க நேரிடும் ,என்று முறையிட்டாள் .இதைக்கேட்ட ராமானுசர்இன்றைக்கானாலும் அழகியமணவாளப்பெருமாள் வெறுந்தலையுமாய் சோறு ஸுமவாமல் இருப்பர் “,அதாவது அன்று தொடங்கி அழகியமனவாளன் தம் தலையிலே சோறு சுமந்து கொண்டு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை என அருளிச்செய்து , அன்று முதல் கோயில் ஸ்ரீ பண்டாரத்திலிருந்து கல்தச்சன் குடும்பத்திற்கு தேவையான ப்ரசாதத்தை அனுப்பி வைத்தார் .

     
    • Murali Battar 4:15 pm on December 14, 2007 Permalink | Reply

      Adiyen!

      Your blog is really interesting and very informative.

      Dasanu Dasan
      -Murali Battar-

  • srivaishnavan 10:24 am on December 7, 2007 Permalink | Reply  

    Paanchajanyam December 2007 (103 ) 

    Paanchajanyam 103

    Download link for

    Paanchajanyam Issue no: 103 December 2007 -http://srivaishnavasri.com/files/panjajanyam_103.pdf

     
  • srivaishnavan 1:59 am on December 7, 2007 Permalink | Reply  

    Srirangam Tidbits 

    1.SRIRANGAM
    Expanded letters

    Srirangam is the foremost among the 108 divyadesams  (sacred shrines)
    Ramanuja the great philosopher,saint and reformer streamlined the temple administration of Srirangam
    Is situated between the 2 rivers Kollidam and Cauvery
    Rama the Great worshipped Lord Ranganatha and gave it as a gift to Vibheeshanaa
    All the Azhwaars except Madhurakavi have sung in praise of Lord Ranganaathaa in their sacred hymns (247)   
    Namperumal is the name of the Utsava Moorthy (procession deity) and He adorns the Rathna – angi (Precious stone sudded garment)during Vaikunta Ekadasi
    Garuda brought the Sri Rangavimana from Sathyaloka to Ayodhya
    Alinaadan Thiruchutru (Built by Thirumangai Azhvaar ) is the 4th Praakaaraa (enclosure ) among the Sapthapraakaaras (7 enclosures) of Srirangam. 
    Many Kings of different dynasties built the various mandapas and sannidhis ,established endowments for conducting festivals

    concept :srivaishnavasri,srirangam

    Adiyen Raamaaanuja Varavaramuni dhaasan Vaasudevan

     
  • srivaishnavan 1:13 am on December 5, 2007 Permalink | Reply  

    பெரியபெருமாளின் பலவகை அனுபவம் 

    1.ஸ்ரீ ரங்கராஜனை ராஜாவாக வைத்து அனுபவம்

    2.அரங்கனை சிந்தாமணிமிவ என்றதற்குச்சேர ரத்னமாக அனுபவித்தல்

    3.ஸ்ரீ ரங்கராஜ ப்ருங்கம் - அரங்கன் வண்டெனத்தகுவன்

    4.ரங்கசந்த்ரமா- அரங்கனுக்கும் சந்த்ரனுக்கும் உள்ள பொருத்தங்கள்

    5.உத்புல்லபங்கஜதடாகமிவ - அரங்கனுக்கும் தாமரைத்தடாகத்திற்கும் உள்ள ஒப்புமை

    6.ஸ்ரீரங்கபாரிஜாதம் - அரங்கனைக் கற்பக விருக்ஷமாக பாவித்திருத்தல்

    7.ஜலதிமிவ நிபீதம் - அரங்கன் கடல் போன்றவன்

    8.அப்தௌ நிஹிதம் அத்ரிமிவ - பச்சை மாமலை போல் மேனி

    9.ஸ்ரீரங்ககுஞ்சர: ஸ்ரீ ரங்கநாத மத்த கஜம் - ஸ்ரீ ரங்கனாதனுடன் யானைக்கு ஒப்பு

    10.அத்ரௌ சயாலுரிவ சீதலகாளமேக -என்னும்படி அரங்கனுக்கும் மேகத்துக்கும் உள்ள ஒப்புமை

    ……………………………………………………………………………………………………………………………………………….இன்னும் வரும்

     
    • Kombur Vankeepuram Madhavan 2:37 pm on December 10, 2007 Permalink | Reply

      SRI RANGA MANGALA NIDHIM KARUNANIVAASAM –

      Lord Sri Ranganatha is the Most Ausspicious Wealth one can possess. and The Auspicious Dwelling Place for Sri KurunA – Sri Ranga Naachiyaar .

      So Arangan can be thought of as Mangala Nidhi & Karun Nivasa.

      Hare Krishna -

  • srivaishnavan 3:49 am on December 1, 2007 Permalink | Reply  

    அஷ்டாங்க யோகம் 

    1.யமம்தயை,சோம்பலின்மை,வைராக்யம்,ஆர்ஜவம்,சபலமின்மை,திருதி (திருதி க்கு அர்த்தம் தெரியவில்லை,தெரிந்தவர்கள் தெரிவிக்கப் ப்ராத்தனை) )ஆகியவை யமம்.2.சுத்தி , ஆஹாரநியமம்,அஹங்கார மமகாரங்கள் இன்மை,ஸங்கமில்லாமை -Sangam Illamaiஸங்கமில்லாமை  means “Thodarbu Inmai” 

    In general in our  native place we used to say “Unnoda Sangathamey Vendam”  which mean unnoda thodarbu allathu uravu allathu natpe vendam

    I gues its same here “ஸங்கமில்லாமை

    clarification given by  Ramanuja Dasan Sundararajan ,Thanks )

    ,க்ஷாந்தி,க்ஷமை,தமம் ,துஷ்டி ஆகியவை நியமம். (இதில் , க்ஷாந்தி,தமம் என்றால் என்னவென்று தெரியவில்லை ,தெரிந்தவர்கள் admin@srivaishnavasri.com மின்னஞ்சல் முகவரிக்குத் தெரிவிக்கப் ப்ரார்த்திக்கிறேன் அனைவருக்கும் பயன்படும் .3.ஸ்வஸ்திகம் முதலிய பந்தங்களை உடையது ஆஸனம்.4.சஞ்சலமான மனதை ஒரு நிலைப்படுத்துவதற்காக வாய்க்கும் மனதுக்கும் சஞ்சரிக்கிற வாயுவை நியமிப்பது ப்ராணாயாமம் .5.விஷயங்களிலிருந்து இந்த்ரியங்களைத் திருப்புவது ப்ரத்யாஹாரம் .6.லக்ஷ்யமாயுள்ள ப்ரம்மத்தினிடம் மனதை நிலைப்படுத்துவது தாரணம்.7. ப்ரம்மத்தை அடிக்கடி மனதுக்குப் பரிசயப்படுத்துவது தியானம் .8.ப்ரம்மத்தோடு ஏகரஸமாக இருப்பது ஸமாதி.இவை யோகலக்ஷணத்தின் சுருக்கம்

     
    • kooram varadaraja Bhattar 3:50 pm on December 16, 2007 Permalink | Reply

      Dear vasu
      I am able to send this message in Tamil.sorry.The blog is so good and I have fully gone thro it.The meaning of word DHRITHI is courage i.e
      Dhairyam.
      Swami Parasara BHattar in his GUNARATNAKOSAM tells this in sloka No.17.which starts as RATHIR.Pl see the elaborate meaning there.
      thank u for having given this chance to me so that I went thro Bhattars GUNARATNAKOSAM.
      bye.KVB

c
compose new post
j
next post/next comment
k
previous post/previous comment
r
reply
e
edit
o
show/hide comments
t
go to top
l
go to login
h
show/hide help
esc
cancel