A blog about Sri Vaishnavism

ஆண்டாள் நோய்க்குத் தோழி சொன்ன மருந்து

Posted by: srivaishnavan on: December 28, 2007

ஆண்டாள் நோய்க்குத் தோழி சொன்ன மருந்து

1. நாராயணா வென்று பாராயணம் செய்யா நாவிருந்தும் வீணே !

2. சராசரங்கள் அறியா மூடர் தழைத்திருந்தும் வீணே !3. தேஹாபிமானம் விடாதவர்கள் செய்யும் ஜெபதபங்கள் வீணே ! 4. போகசுகம் தன்னை நினைத்துச் செய்யும் பக்தி பூஜை யாவும் வீணே !5. நறுந்துழாய் இல்லாத் திருவாராதனம் பல நாளும் செய்தும் வீணே !

6. விருந்துடன் இருந்து அமுது அருந்தாதவனுரை வீடு வாசலும் வீணே !7. மணவாளனுடன் தினம் எதிர்த்துப் போராடும் மனைவியிருந்தும் வீணே !8. குணவான் என மேலார் உரைத்திட நடவாத குமரன் இருந்தும் வீணே !9. மனு நீதி பிசகிடும் குடிகளை வருத்திடும் மன்னன் இருந்தும் வீணே !

10. காரணவஸ்துவை விட்டுப் பல தெய்வம் தொழுவதும் வீணே !11. தரணியில் ஹரிப்ரீதி இல்லாதவன் செய்யும் தர்மம் யாவும் வீணே ! 12.

தரணியில் உலுத்தராய் வீணருக்குழைத்து சரீரம் வளர்ப்பதும் வீணே !13.பாரினில் ஆழ்வார்கள் அருளிச்செய்யா நூலைப் படிப்பதும் வீணே !14.நாரியரில் மிக்க நற் செய்கையில் லாதார் அழகாயிருந்தும் வீணே !

1 Response to "ஆண்டாள் நோய்க்குத் தோழி சொன்ன மருந்து"

Wonderful excellent preaching by Andal. each and every human being must follow. else, its deadly waste to survive as SriVaishnavas

Namo Narayana

vijayalakshmi s.

Leave a Reply