Buy Online Sri Vaishnava Books, Amavasya Tharppana Bhugnams,Thirumann Petti,Salagrama Box and other Sri Vaishnavism related Gift articles and Navarathri return Gifts

Featured

Please visit www.instamojo.com/srivaishnavasri to buy Sri Vaishnava Books , CDs,DVDs,Thirumann ,Poonool Etc., online.

Pavithrotsavam

Day 1

நித்தியப்படி ஏற்பட்ட முதல் திருவாராதனமான பொங்கல் நிவேதனமானதும், நம்பெருமாள் புறப்பட்டு, யாகசாலை வாசலில் பலவிதப் புஷ்பங்களை ஏராளமாகப் பரப்பி அதன் மேல் நின்றவாறே கந்தாடை ராமானுசனுக்கும் (தற்போது இந்தப் பட்டத்தை யாரும் அலங்கரிக்கவில்லை) சாத்தாதவர்களுக்கும் ஸேவை மரியாதைகளை அனுக்ரஹிப் பார். நம்பெருமாள் யாகசாலை எழுந்தருளியதும் திருவாரா தனம். இங்கு வேதபாராயணம் பண்ணும் பாத்தியமுள்ள தென்கலையார் வந்து பாராயணம் தொடங்கும் போது திருவாராதனம் ஆரம்பிக்கப்படும். பவித்திரோத்ஸவம் நித்திய பூஜா லோபத்துக்காக ஏற்பட்டதாகையால், இன்றைய திருவாராதனத்தின் முடிவில் ஒவ்வொரு அர்கிய பாத்தியத் துக்கு ஒரு தீபமாக 360 ஆவ்ருத்தி தீபாராதனம் நடக்கும். 360 ஆவ்ருத்தி தீபாராதனம் முடிவதற்கு நாலு மணி நேரத்துக்கு மேலாகும். அதுவரையிலும் வேதபாராயணம் இடைவிடா மல் நடந்து கொண்டிருக்கும்.
முதலில் நாராயண உபநிஷத்து தொடங்கிப் பிறகு சந்தோமித்ர;,(சரிபார்க்க) அம்பஸ்ய பாரே என்ற உபநிஷத்து பாகமும் அச்சித்ர அச்வமேதங்களும் பாராயணம் செய்யப்படும். திருவாராதனம் ஆனபிறகு திருமஞ்சனமும் தளிகை நிவேதனமும் நடந்து பஞ்சகுண்ட ஹோமம் நடக்கும். ரக்ஷா பந்தனமாகி உத்ஸவருக்கெதிரே வேதபாராயணத்துடன் பவித்திரப் பிரதிஷ்டையாகும். பவித்திரத்தை ஸ்வஸ்திவாசனத்துடன் பெரிய பெருமாளிடம் கொண்டு போய் முதலில் அவருக்கும், பிறகு எல்லா மூர்த்திகளுக்கும் திருமார்பு பவித்திரம் சாற்றப்படும். தீர்த்த விநியோகமானதும் நம்பெருமாள் யாக சாலையிலிருந்து உள்ளே எழுந்தருளுவார். பிறகு யாகசாலையில் எழுந்தருளப் பண்ணப்படும் திருவரங்க மாளிகையார் உத்ஸவம் முடியும் வரையில் அவ்விடத்திலேயே எழுந்தருளியிருப்பார்.

வடநாட்டு திருப்பதிகள் Vadanaattu ThiruppathigaL

தேரு முனிவர்களேத்துமனுதினம்

தெய்வ வடமலை மெய்வதரி

நாருமதுரை யயோத்தி பாடி

நைமிசாரண்யமுஞ் சேர்த்தி

வீறுடை கோவர்த் தனமும் – பிரிதி

பாற்கடலும் துவரை லோசனமும்

கூறியசாளக் கிராமமுஞ் சிங்கவேள்

குன்றமொடுபக ரின்னமம்மா – கண்ட

மென்னுங் கடிநகர் சொன்னமம்மா (கும்)

 

Dasasthu Cartels – Atrocities n the name of Vedic Rituals

    திருமதி./திரு. ……… அபர கார்யங்களில் கீழ்க்கண்ட குறைபாடுகள் காணப்பட்டன.

நமது பந்து வர்க்கத்தில் பெரியவர்கள் சொல்லை யாரும் கேட்பதில்லை. கர்த்தாவுக்கு மந்த்ரங்களுடைய அர்த்தங்களோ, க்ரியைகள்  சரியாக உபாத்யாயரால் மேற்கொள்ளப் படுகின்றனவா என்பது பற்றியும் தெரியாது. கர்மங்களைச் செய்திடும்போது அனுஜ்ஞையையும், விவாஹ  காலங்களில் பல தானத்தையும் இவர்கள் ஒழுங்காக விநியோகிப்ப தில்லை.
    

…. அன்று பெயருக்கு …….. உபாத்யாயராய் இருக்க, ஒரு வத்தியார் தீட்டோடு  மந்திரங்களைச் சொன்னார். கர்மாக்களையும் செய்து வைத்தார். சாஸ்த்ர விதிப்படி கொள்ளிபோட்ட கர்த்தா தான்  இன்னொரு சாவு நடந்த வீட்டிற்குச் செல்லக்கூடாதேயொழிய, ஞாதிகள் செல்லலாம்.

    1. பல விதி மீறல்கள் நடக்கின்றன . பார்யை இறக்கும்போது சரமச்லோக பத்திரிகையில் அவரை இன்னாரின் கணவர் (அதாவது கணவர் உயிருடன் இருக்கும்போது) என்று கணவர் பெயரைக்  குறிப்பிடத் தேவையில்லை , அது போலவே சரமச்லோகம் ஸம்ஸ்க்ருதத்தில் தான் இருக்க வேண்டும் என்ற கட்டாயமும் இல்லை.

    *ஜீவதசையில் இருப்பவருடைய பெயர் சரமச்லோக பத்திரிகையில் இடம்பெறக் கூடாது (கர்த்தாக்கள் இதற்கு விதிவலக்கு) என்பது ஸ்ரீரங்கத்து பழக்கம்.

    2. சபிண்டீகரணத்தன்று வயதில் குறந்தவர்களை பிதுர்ஸ்தானத்தில் பல வத்தியார்கள் வரித்கின்றனர் சபிண்டீகரணத்தில் பிதுர் ஸ்தானத்தில் வயதானவர்தான் இருக்க வேண்டும், பரமபதித்தவருடைய நெருங்கிய உறவினராய் இருக்க வேண்டும் என்பது விதி.

    3. இயல் கோஷ்டி என்பது  ஒரு புனிதச் சடங்கு. அதில் அருளிச் செயலுக்கு முக்கியத்வம் கொடுக்கப்பட வேண்டும். ஸ்ரீரங்கம் ஸ்ரீஅஹோபில மடம் முத்ரகர்த்தா வேத வித்வான் ஸலக்ஷண கனபாடி, குரிச்சி திருமலை கிடாம்பி ஆத்ரேய ராமஸ்வாமி ஐயங்கார்  அவர்களால் தொகுத்து வெளியிடப்பட்ட ஸ்ரீவைஷ்ணவ அபரப்ரயோகம் (ஆபஸ்தம்பஸூத்ரம் – யஜுர்வேதம்) என்ற புத்தகத்தில் இயல் சாற்று செய்யும் விதம் இவ்வாறு உள்ளது.

சுபஸ்வீகாரம் செய்வது எப்படி .

13வது நாள் வீடு மெழுகிக் கோலமிட்டு மாவிலை தோரணம் கட்டி கர்த்தா தீர்த்தமாடி த்வாதசோர்த்வ புண்ட்ரம் தரித்து பெருமாள் ஆராதனம் செய்து, பெருமாளுக்கு பக்கத்தில் 2 வாழை நுனி இலையில் 1 படி அரிசி சேர்த்து அதின் பேரில் கும்பம் வைத்து, மாவிலை, மஞ்சள் தேங்காய், சந்தனம் இவைகளால் அலங்காரம் செய்து வைத்து, ஸேவை பாராயணம் தொடங்கி ஸேவித்து, பரியட்டம் மாலை போட்டுக் கொண்டு கர்த்தா கும்பத்தையும், ஸ்வாமிகள் கரும்பையும் எடுத்துக் கொண்டு வாசலில் வந்து பலகையில் ஸ்வாமிகளை நிற்க வைத்து மற்றவர்களைக் கொண்டு ஸ்வாமிகள் திருவடிகளைச் சோதிக்கச் செய்து பந்துக்கள் பேர் சொல்லி எம்பெருமானார் ஸம்பாவனை செய்து நூற்றந்தாதி சாற்றுமுறை, விண்ணவர் வேண்டி தமிழ் வேதமறிந்த பகவர்களே என்று கரும்பு தோகையை முறித்தெறிந்து விட்டு கர்த்தாவுக்கு ஒரு தடவை மட்டும் பால்தொட்டு பிடிசுற்றி, தேங்காய¢ உடைத்து மஞ்சநீர் எடுத்து உள்ளே வந்து, தோசை சுண்டலை பெருமாளுக்கு கண்டருளப்பண்ணி கற்பூரஹாரத்தி செய்து சாற்று-முறை, பெருமாள் நாச்சியார் ஆழ்வார் ஆசார்யன். ஸம்பாவனை செய்து உட்கார்ந்து சரமச்லோகம் வாசித்து சுப ஸ்வீகாரம், புதுவேஷ்டி புடவை ஓதிவிட்டு கட்டிக் கொண்டு ஆசீர்வாதம் பெற்று பிருஹஸ்பதி & ஸம்பந்தி பேத்தி பேரன்களுக்கு உபலாலன ஸம்பாவனைகள் (ப்ரதி ஸம்பாவனைகள்) செய்து மஞ்சநீர் எடுத்து எழுந்து எல்லோரும் சாப்பிட வேண்டியது.   

1. ராயபுரம் ப்ரஹ்ம தீர்த்தம் போன்ற நித்ய தீட்டு இருக்கும் இடங்களில் சோதகும்பம் முடித்துக் கொண்ட பிறகு, கர்த்தாவின் வீட்டிற்கு வந்து, அங்குள்ள சாளக்ராம பெருமாளுக்கு திருவாராதனம் ஸமர்ப்பித்து,  கோஷ்டி தொடக்கம் செய்வது உசிதம். அதுதான் முறை. இந்த நிகழ்ச்சி ……. அம்மாள் / ஸ்வாமி பரமபதித்த இடத்தில் செய்வதே சிறந்தது.  ராயபுரம் போன்ற ப்ரம்ம தீர்த்தங்களில் சுபஸ்வீகாரம் செய்யும்போது பக்கத்தில் நடைபெற்றுக் கொண்டிருந்த சபிண்டீகரணத்தில் உச்சரிக்கப்பட்ட மந்திரங்கள் காதில் கேட்க நேரிடும் . ராயபுரம் போன்ற ப்ரஹ்ம தீர்த்தங்களில் மங்கள நிகழ்ச்சிகள் நடைபெறுவதில்லை. அதற்காகத்தான் நம் முன்னோர்கள் கர்த்தாவின் இல்லத்தில் மட்டும்தான் இயல்கோஷ்டி நடைபெற வேண்டும் என்று அறுதியிட்டுள்ளார்கள். யாரோ செய்தான் என்பதற்காக நமக்கு அமைந்துள்ள பழக்கவழக்கங்களை மாற்றுவதற்கு உபாத்யாயர்களான நீங்களே காரணம்.இது தவறு.
2. இயல் ஸ்ரீவைஷ்ணவர்கள் திருப்பாதங்களை ஒருவர் அலம்ப, அந்த ஸ்ரீபாத தீர்த்தத்தை கர்த்தாக்கள் ப்ரோக்ஷித்துக் கொண்டிருக்க வேண்டும். பெரும்பாலும் இவ்வாறு நடைபெறுவது இல்லை. ஆனால் எம்பெருமானார் ஸம்பாவனை எல்லோரும் கொடுக்கலாம் என்று உரக்கக் கூறி வசூல்வேட்டையில் மட்டும் பல வத்தியார்கள் ஈடுபடுகின்றனர்.
3. இந்த சரமச்லோக பத்திரிகையை ஆசார்யன் அல்லது பெரியவர் ஒருவர் படித்து, வரிவரியாக ச்லோகத்திற்கு அர்த்தம் சொல்லி, மஞ்சள் தடவி, ஏக காலத்தில் மூன்று கர்த்தாக்களுக்கும் கொடுக்க வேண்டும். அதுதான் முறை.
4. சரமச்லோகம் எழுதியவர்க்கு என்று ஒரு ஸம்பாவனை உண்டு. அதுவும் பெரும்பாலான இடங்களில் இது செய்யப்படுவதில்லை. ஆனால் திருவிருத்தம் ஸேவிக்க வருபவர்களுக்கு ( அத்யாபகர்களுக்கு) (திருவிருத்தத்தில் முதல்பாட்டையும் கடைசி பாட்டையும் முணுமுணுப்பதற்கு )ரூ.500 என்கிற தொகையை (கமிஷன் பெற்றுக் கொண்டு) வாத்தியார்கள் ஸம்பாவனையாக பெற்று தருகிறார்கள் . இது எந்த விதத்தில் நியாயமாகும்.

5. சுபஸ்வீகார நிகழ்ச்சியின்போது, சீர் கொண்டு வந்த சம்பந்திக்கு, எதிர் ஸம்பாவனை செய்ய வேண்டும்  உபாத்யாயரர்கள்தான் கர்த்தாவிடம் சொல்லி, இந்த ப்ரதி ஸம்பாவனையைச் செய்ய வேண்டும். கர்த்தாவிற்கு யார் யாருக்கு எதற்காக ஸம்பாவனை, எவ்வளவு செய்ய வேண்டுமென்பது தெரியாது. எப்படி வத்தியார்களான உங்களுக்குச் சேரவேண்டிய பணத்தை, வேண்டிய அளவுக்கு எடுத்துக் கொள்ளும்போது ஏன் பிரதி ஸம்பாவனையைப் பற்றிய நினைவே உங்களுக்கு வருவதில்லை.
    இதுபோன்று எவ்வளவோ விஷயங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். இனிவரும் காலங்களில்  சாஸ்த்ர மரியாதையை ஒட்டி சபையில் உள்ள பெரியோர்களை இவ்வாறு செய்யலாமா செய்யக்கூடாதா என்பதைக் கேட்டு, எப்படிச்செய்ய வேண்டும் என்பதையும் அவர்களிடம் கேட்டு, இது போன்ற  காரியங்களை வாத்தியார்கள் நிர்வாகம் செய்ய வேண்டும். மந்திரத்தை உருப்போட்டதால் மட்டும், உங்களுக்கெல்லாம் அர்த்தம் தெரியும் என்று  கொள்ள முடியாது.  அபரகார்யங்களுக்கான மந்திரங்கள், செயல்விளக்கங்கள், சிராத்த மந்திரங்களின் பொருள் ஆகியவற்றைப் பற்றிய பல புத்தகங்களைப் படித்து தெரிந்து கொள்ளவேண்டும் . பெரியவர்களிடம் கேட்டு, நடைமுறை பழக்கங்களைக் கைக் கொள்ள வேண்டும். ஆஹ்நீகம், வைத்யநாதீயம், போன்ற  தர்ம சாஸ்த்ரங்களைப் படிக்க வேண்டும். அவசரத்தில் ஒவ்வொரு வைதிக கர்மத்தையும், செய்வதால் எந்தப் பலனும் கிடைக்காது. இனிவரும் காலங்களில் வாத்தியார்களான நீங்கள் சரியான நடைமுறையைக் கைக்கொண்டு சமுதாயத்திற்கு உள்ளபடி தொண்டுசெய்ய வேண்டும்.  

மேலே சொன்ன விஷயங்கள் பெரும்பாலான  வாத்தியார்களுக்குப் பொருந்தும் . 10 % வாத்தியார்கள் விதிவிலக்காக நல்ல வாத்தியார்களாக இருக்கக்கூடும் .அவர்கள் இந்தக் கட்டுரையைப் பொருட்படுத்த வேண்டாம். மற்ற Greedy and Avaricious   வாத்தியார்கள் இதே போல் பித்ரு கார்யம் என்ற போர்வையில் கர்த்தாக்களை  Exploit செய்ய முற்படுவார்களேயானால் வெகு சீக்கிரமே பெரும்பாலான கர்த்தாக்கள் இந்த Dasasthu Cartel ல்லிற்குப் பயந்து கோவிந்தாக் கொள்ளி போட வாய்ப்பிருக்கிறது. அதன் பின்னர் அவர்களுக்கு தற்போது கிடைக்கும் Tax Free Income குறைய அவர்களே காரணமாகி விடுவார்கள் .

 

 

அணிகலன்கள் அகராதி – Jewels Dictionary

அ)

1.அக்கசூத்திரம் – ருத்ராக்ஷ மாலை

2.அக்கமாலிகை – ருத்ராக்ஷ மாலை – அக்கமாலிகை விழைந்து புனை …………அழகியோர்(திருக்காளத்தி பூ.)

3.அக்கமாலை – செபமாலை

4.அக்கவடம் – ருத்ராக்ஷ மாலை

5.அக்குச்சரி – கையில் அணியும் சங்கு வளை ( Shell Bracelet)

6.அக்குவடம் – சங்குகளைக் கோர்த்து கழுத்திலோ இடுப்பிலோ அணியும் மாலை ( பெரியாழ்வார் திருமொழி – 1.8.2,அக்குவடம் உடுத்து ஆமைத்தாலி பூண்ட அனந்தசயனன் )  A string of shell beads worn on the neck or waist

7.அக்கொழுங்கு – கழுத்தில் அணியும் சங்கு மணிமாலை (  A string of shell beads)

8.அகடச்சக்கரம் – அரைபட்டிகை

9.அகலமணி – மார்பில் அணியப்படும் மணிகள் பதித்த அணிகலன் வகை ( Like the ones worn by Kings in T.V.Serials like Ramayana Mahabharatha etc.,)

10.அகளசூடம் – தலையின் உச்சியில் அணியும் அணிகலன் ( An Ornament worn on the Head)

11.அகி – மகளிர் கால்களில் அணியும் ஒலியெழுப்பும் சிலம்பு ( A pair of Tinkling anklets worn by women)


12.anggavalayam  அங்கவலயம் பாம்பின் தலை வடிவத்தில் உள்ளதும் பூட்டும் வாயைப் பெற்றதுமான வாகுவலயம் -An armlet worn on the upper arm with a front piece resembling the Cobra’s Head ( Seen in movies like Troy,Benhur etc.,)

13.Angarakkai –  அங்கரக்கை = தாயித்து

14.அங்கிலி-அங்குலி நவரத்தினங்களால் ஆன அங்கிலி இரண்ட

15.அங்குரீயகம் – மோதிரம்  Ring worn on a finger 16.angguli அங்குலி – கை கால் விரல்களில் அணியப்படும் மோதிரம் Finger ring / Toe ring

 

11.akki அக்கி –

சொல்லும் பொருளும்

(சொல்=8) + (பொருள்=1) =9

மந்திரம் என்றால் சொல் ரூபமாயிருப்பது மட்டுமின்றி கோயில் ரூபமாயிருப்பதும் ஆகும்.ஆதலால் ஆலயங்களும் மந்திரங்கள் என்று காட்டப்படுகிறது.

திருமந்திரம் 8 எழுத்து + கடவுள்1 =9

ஸ்ருதிகள் 108 = 1+0+8 = 9

ஸ்ம்ருதிகள் 108 = 1+0+8 = 9

புராணங்கள் 18 = 1+8 = 9

பாரதப் போர் நாள்கள்  18 = 1+8 = 9

கீதையின் அத்யாயங்கள் 18 = 1+8 = 9

விஷ்ணுவாலயங்கள் (திவ்யதேசங்கள்) 108 = 1+0+8 = 9

சிவலிங்கங்கள் 1008 = 1+0+0+8 = 9

அண்டங்கள் 1008 = 1+0+0+8 = 9

மேற்கூறிய தொகைகள் ஆரம்பத்தில் 8 என்ற சொல்லில் முடிகின்றன.ஆனால் இத்தொகைகளைக் கூட்டியோ ,பெருக்கியோ,கழித்தோ , வகுத்தோ என்ன செய்தாலும் கடைசியில் நிற்பது 9 ஆகத் தான் இருக்கிறது.

இதனால் நவமியில் பிறந்த ஸ்ரீ ராமரும் அஷ்டமியில் பிறந்த ஸ்ரீ கிருஷ்ணரும் “ஏகமேவ அத்விதீயம்” என்கிறபடி அப்பரம்பொருள் யாரெனத் தெளியலாம்

 

ஸ்ரீராமரும் ஸ்ரீராமானுஜரும்

ஸ்ரீ ராமர்- ப்ரம்ம ருத்ர ,இந்த்ராதி தேவர்கள் டுஷ்அட நிக்ரஹ சிஷ்ட பரிபாலனம் செய்து தர்மத்தை ஸ்தாபிக்கும்படி பாற்கடலில் பையத்துயின்ற பரமனை ப்ரார்த்தித்த்தார்கள்

ஸ்ரீ ராமானுஜர் – ஸ்ரீமதுரகவிகள் குத்ருஷ்டிகளாகிற இதர மதங்களை நிரசித்து பரம வைதிக சித்தாந்தத்தை ஸ்தாபிக்கும் படி பெரியவண்குருகூர் ஸ்ரீ ஆதிவண் சடகோபனைப் ( நம்மாழ்வாரை) ப்ரார்த்தித்தார்

*******************************************************************************************************************************************************

ராமர் – தசரத சக்ரவர்த்தி புத்ர காமேஷ்டி யாகம் செய்து பாயசத்தை லபித்து (பெற்று) தன் பட்ட மஹிஷுகளுக்குக் கொடுத்து கர்ப்பம் தரிப்பித்தார்

ராமானுஜர்-ஸ்ரீமந்நாதமுனிகள் ’கண்ணினுண்சிறுத்தாம்பு’ அனுசந்தானம் செய்து பவிஷ்யதாசார்ய ராமானுஜ விக்ரஹத்தைப் பெற்றார்.கேசவ சோமயாஜிய்டார் காந்திமதி தேவியின் கர்ப்பத்தில் இளையாழ்வாரை தரிப்பித்தார் (பிறக்க வைத்தார்)

*******************************************************************************************************************************************************

ஸ்ரீ ராமன் அவதாரஸ்தலம் அயோத்தி அரண்மனை

ஸ்ரீ ராமானுஜர் அவதாரஸ்தலம் ஸ்ரீபெரும்பூதூர்

*******************************************************************************************************************************************************

ஸ்ரீ ராமனுடன் பரத ,லக்ஷ்மண சத்ருக்ணர்களின் ஜனனம்

ஸ்ரீ ராமானுஜருடன் ஸ்ரீ எம்பார்,முதலியாண்டான்,பிள்ளையுறங்காவில்லிதாஸர் ஆகியோரின் ஜனனம்

*******************************************************************************************************************************************************

ஸ்ரீராமன் வசிஷ்டரிடத்தில் வித்யாப்யாஸம் செய்தார்

ஸ்ரீ ராமானுஜர் யாதவப்ரகாசனிடத்தில் வேத அத்யயனம் செய்தார்

*******************************************************************************************************************************************************

விஸ்வாமித்திரன் தசரதனிடம் தர்க்கித்து வசிஷ்ட சுமந்திராதிகளுடன் ஆலோசித்து யாக ரக்ஷணத்துக்காக காட்டுக்கு அழைத்துக்கொண்டு போனார்

திருவரங்கப்பெருமாள் அரையர் காஞ்சி தேவப்பெருமாளிடம் தர்க்கித்து ,பெருந்தேவி தாயாருடனும் திருக்கச்சி நம்பியுடனும் ஆலோசித்து ஸ்ரீ வஷ்ணவ தர்சன ரக்ஷணத்துக்காக ஸ்ரீ ராமானுஜரை ஸ்ரீரங்கத்துக்கு அழைத்துச் சென்றார்

*******************************************************************************************************************************************************

ஸ்ரீ ராகவன் தாடகையைக் கொன்றார்

ஸ்ரீ ராமானுஜர் தன்னைக்கொல்ல நினைத்த யாதவப்ரகாசனின் ஆசையைக் கொன்றார்

*******************************************************************************************************************************************************

ஸ்ரீராகவன் கோசிகன் யாகத்தை பூர்த்தி செய்தார்

ஸ்ரீ ராமானுஜர் தேவப்பெருமாளுக்குத் திருமஞ்சனத் தீர்த்தம் கொண்டு வந்தார்

*******************************************************************************************************************************************************

ஸ்ரீ ராமபிரான் தனது பாத தூளியால் அகலிகை சாபம் நீக்கினார்

ஸ்ரீ ராமானுஜர் த்ன் பாத தூளியால் பல்லவ தேவராயன் மகளின் சாபம் நீக்கினார்

*******************************************************************************************************************************************************

ஸ்ரீ ராகவன் சிவதனுசை ஒடித்து ஸீதாபிராட்டியை மணம் புரிந்தார்

ஸ்ரீ ராமானுஜர் யாதவப்ரகாசனை ஜெயித்து சிஷ்யனாக்கி,கூரத்தாழ்வானையும் தன் அந்தரங்க சிஷ்யரக்கிக் கொண்டார்

*******************************************************************************************************************************************************

ஸ்ரீராமபிரான் பரசுராமரை ஜெயித்து நாராயணவில்லை த்ன் வசமக்கிக் கொண்டார்

ஸ்ரீ ராமானுஜர் யஜ்ஞமூர்த்தியை தர்க்கத்தில் ஜெயித்து தன் சிஷ்யராக்கினார்