செங்கமலக்காவிலுள்ள சீராரிளங்கோதை

அங்கதனை நோக்கி அடி வணங்கி தெண்டனிட்டு என்னுள்ளம் நோய்தீர மருந்துண்டோ சொல்தோழீ என்னஉண்டுண்டு ஆய்ச்சியரே ஒரு மருந்து சொல்கிறேன் கேள்

தென்னன்குறுங்குடி திருமாலிருஞ்சோலை யென்னும்சுக்கைத்திகழத்தட்டி ஸ்ரீசைலேச பாத்திரத்தில் சேர்த்து

வஞ்சி நகரமென்னும் இஞ்சியை நறுக்கி மண்டங்குடி என்னும் வஸ்திரத்தில் வடிகட்டி பிருந்தாவனமென்னும் அடுப்பை வைத்து திருவேங்கடமென்னும் விறகை முறித்துவைத்துஓம் நம: என்னும் உமியைத்தூவி

திருநீர்மலையென்னும்

நெருப்பை மூட்டிதிருமாமணிக்கூடத்தில் இறக்கி வைத்து

திருவாய்மொழி என்னும் தேனைக்கலந்துஅமலனாதிபிரான் என்று அழுத்தி பிசைந்து

கண்ணபுரம் என்று கலக்கி எடுத்துச் சாப்பிட்டால்

இந்நோய் தீருமம்மா

ஆண்டாள் சொல்வது

இது நல்ல மருந்து தோழீ : இதை எங்கிருந்து நீ கொண்டு வந்தாய்? இது ஊரில் இல்லாத மருந்து

உல்கோர் அறியாத மருந்து ஆழ்வார்களும் ஆசார்யர்களும் விரும்பும் மருந்து இது பற்றற்ற ஞானியர் பருகும் மருந்து

பாகவதோத்தமர்கட்குகந்த மருந்து

நாராயணனே நமக்கே பறைதருவானென்று பாடிப்பறைகொள்ளும் மருந்து

போய பிழையும் புகுதருவான் நின்றனவும்தீயினில்தூசாகும் மருந்து

செங்கண் திருமுகத்துச் செல்வத்திருமாலால்எங்கும் திருவருள் பெற்று இன்புறும் மருந்து எருதுக்கொடியானும் பிரமனும் இந்திரனும்

மற்றும் யாரும் அறியாத மருந்து நோய் மூப்பு ,பிறப்பிறப்பு பிணி

வீயுமாறு செய்யும் மருந்து

கொண்டபெண்டிர் மக்கள் உற்றார்

சுற்றத்தவர் பிறரும் கண்டதோடு பட்டதல்லால் காதல் மற்று

யாதுமில்லை என்பவர்கள் கருதும் மருந்து

ஊரிலேன்காணியில்லை உறவு மற்றொருவரில்லை

பாரில் நின் பாத மூலம் பற்றினேன் என்பவர்கள்பகரும் மருந்து

அணியனார்செம்பொன் ஆய அறுவரை

அனைய கோயில் மணியனார் கிடந்தவாற்றை

மனத்தினால் நினைக்கும் மருந்து

தாயே தந்தையென்றும் தாரமே கிளையென்றும்நோயில்படவொட்டாத மருந்துஇம்மைக்கும் ஏழேழ் பிறவிக்கும் சேமம்

இன்னோய்க்கும் ஈதே மருந்துஉன்னுள்ளம் நோய் தீர்வதற்குஇதுவேஉகந்த மருந்தம்மா

நன்றிகோதா மஞ்சரி கீர்த்தனைகள் அரங்கராமானுஜதாசர்,மதுரை

Advertisements