ஸ்ரீ ராமானுஜர் , ஸ்ரீ கூரத்தாழ்வான் ஆகியோருடைய 1000ஆவது ஆண்டுவிழா வைபவத்தைக் கொண்டாடும் வழிமுறைகள் ஸ்ரீ வைஷ்ணவ ஸ்ரீ க்ருஷ்ணமாசார்யரின் உரத்த சிந்தனைகள்

1.அனைத்து ஸ்ரீ வைஷ்ணவத்திருகோயில்களிலும் பல இடங்களில் ராமானுசர்,கூரத்தாழ்வான் ஆகியோருடைய பெருமைகளைப் பறை சாற்றும் அறிவிப்புப் பலகைகளை (Neon signages,Flex boards,Digital Billboards ,Running displays etc.to attract the casual visitor)நிறுவுதல் வேண்டும் .2. ராமானுசர் , கூரத்தாழ்வான் திருப்பாதம் பதித்த இடங்களில் (திவ்ய ஸ்தலங்க்கள்) உள்ள மக்களுக்கு ராமானுசரின் மனித நேயப்பண்புகள், நிர்வாகத்திறமை(Management principles),கோயில் சீர்த்திருத்தங்கள் ( Temple reforms) , சமுதாயச்சீர் திருத்தங்கள் Reformer of the society (தாழ்ந்த ஜாதி என ஒதுக்கி வைக்கப்பட்ட மக்களைத் திருக்குலத்தோர் எனப் பெயரிட்டு அழைத்ததோடு மட்டுமல்லாமல் அவர்களுக்கும் இறை வழி பாட்டுக்கு வழி வகுத்ததால் )போன்ற 3.

நம் நாட்டில் இந்துக்களால் நடத்தப்படும் அனைத்துக் கல்லூரி, பள்ளிகளிலாவது ஸ்ரீ ராமானுசருடைய வாழ்க்கை வரலாறு தொடர்பான பேச்சுப் போட்டி,கட்டுரைப்போட்டி,வினாடி வினா போன்றவற்றை நடத்தி ஸ்ரீ ராமானுசரைப் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் .போட்டியில் வென்றவர்களுக்கு இலவச பாடப்புத்தகங்கள்,சீருடைகள் ,கல்விக்கான் ஊக்கத்தொகை போன்றவற்றைக் கொடுது அவர்களை ஊக்குவிக்கலாம் .4.வில்லுப்பாட்டு,பொம்மலாட்டம்,ஓரங்க நாடகங்கள் ஆகியவற்றைத் தெருமுனைகளில் அந்தந்த துறை சார்ந்தவர்களைக்கொண்டு நடித்துக்காட்டுவதற்கு தகுந்த ஏற்பாடுகள் செய்யவேண்டும்.5.ஸ்ரீ கூரத்தாழ்வான் நினைவாக நாடு முழுவதும் இலவசக் கண் பரிசோதனை, ஏழைகளுக்கு இலவசக் கண்ணாடி வழங்குதல் போன்ற சமுதாயம் சார்ந்த பணிகளை நாம் மேற்கொள்ள வேண்டும். இதுவே பாமரர்களிடம் எளிதில் ஸ்ரீ கூரத்தாழ்வானைக் கொண்டு செல்லும் வழியாகும் .எப்படித் தம் கண்களை இழந்த பின்னும் ஸ்ரீ கூரத்தாழ்வான் ஸ்ரீ வைஷ்ணவ சமூக மேம்பாட்டின் பொருட்டுக் தமக்குக் கண்களை வேண்டினாரோ அதே போல் நாமும் சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினருக்காக கண்ணொளி திட்டத்தைச் செயல்படுத்தவேண்டும் .இதன் மூலம் ஸ்ரீ கூரத்தாழ்வானுடைய பக்தி,தியாகம் மற்றும் மேன்மை அடித்தட்டு மக்களையும் சென்றடையும் என்பதில் ஐயமில்லை

Advertisements