பிக்ஷேதி சிஷ்ய ஜன ரக்ஷண தக்ஷிணேதி

சாடீதி சாஸ்வத மடோபதி கல்பனேதிக்ரந்தோப ஸங்க்ரஹண மூல்யமிதிப்ருவாணா

:ஸந்யாஸினோபிதததே ஸததம் தநாயாம்

பிக்ஷை என்றும் சிஷ்ய ஜனங்களைக் காப்பாற்றும் பொருட்டு ஏற்பட்ட தக்ஷிணை என்றும் வஸ்திரமென்றும் ,மடம் என்கிற ஸ்திரமான ஒரு இருப்பிடத்தை ஏற்படுத்தவேண்டும் என்றும் க்ரந்தங்களைச் சேர்த்து நூல் நிலையம் ஏற்பாடு செய்ய மூலதனம் வேண்டும் என்று சொல்லிக்கொண்டு ஸன்யாசிகளும் கூட எப்போதும் பணத்தின் மீது ஆசை வைக்கிறார்கள் என ஸ்வாமி தேசிகன் தமது ஸங்க்கல்ப சூர்யோதயம் நாடகத்தில் குறிப்பிட்டுள்ளார் .

Advertisements