இன்று முதல் நம்பெருமாள் சோறு ஸுமவாமல் இருப்பர்

உடையவர் திருவரங்கத்தில் எழுந்தருளியிருந்த காலத்தில் ஒரு கல்தச்சன் தனது கோசாலையை நடத்தி வரும்போது ஒரு கல்லைப் பிளக்க அந்தக் கல்லின் நடுவில் தண்ணீரும் தேரையும் இருந்தது கண்டு மிகவும் ஆச்சர்யப்பட்டான்.ஒரு கல்லின் நடுவில் இருக்கும் தேரைக்கு வாழ்வளிக்கும் பெருமாள் நமக்கும் வாழ்வளிப்பார் என்ற எண்ணத்துடன் தன்னுடைய குடும்பப் பொறுப்புகள் அனைத்தையும் விட்டு எல்லாம் பெருமாள் செயல் எனக் கோயில் வாழ் சோம்பராய் ஒரு மரத்தடியில் அமர்ந்து எந்த வேலையும் செய்யாமல்

வாழ்ந்து வந்தான் .

இப்படியாகத் தன்னையும் தன் குடும்பத்தையும் காப்பாற்றும் பொறுப்பு பெருமாளுடையது என்னும் உறுதிப்பாட்டுடன் கல்தச்சன் வாழ்ந்து வந்த காலத்தில் , ஒவ்வொரு நாளும் அழகியமணவாளன் தமக்குக் கண்டருளப்பட்ட திருவொத்த சாதத்தை (அரவணையை) தானே தன் தலையில் சுமந்து சென்று அந்தக் கல்தச்சனுக்கும் அவன் குடும்பத்துக்கும் உணவாக அளித்துவந்தான் .சில நாட்களுக்குப் பின் அந்தக் கல்தச்சன் இறந்து விட்டான் .அப்போது அவன் குடும்பத்துக்கு ஆறுதல் சொல்வதற்காக ராமானுசர் அவன் வீட்டுக்குப் போனபோது , அவனுடைய மனைவிஇன்றுவரை எங்களுக்குக் எந்தக் குறையுமில்லாமல் உணவு கொடுத்தனுபினீர் .இப்போது என் கணவனும் இறந்து விட்டான் . அதற்காக சோறு அனுப்புவதை உடனே நிறுத்தி விடாதீர்கள்என் குழந்தைகள் பசியோடிருக்க நேரிடும் ,என்று முறையிட்டாள் .இதைக்கேட்ட ராமானுசர்இன்றைக்கானாலும் அழகியமணவாளப்பெருமாள் வெறுந்தலையுமாய் சோறு ஸுமவாமல் இருப்பர் “,அதாவது அன்று தொடங்கி அழகியமனவாளன் தம் தலையிலே சோறு சுமந்து கொண்டு செல்ல வேண்டிய நிர்ப்பந்தம் இல்லை என அருளிச்செய்து , அன்று முதல் கோயில் ஸ்ரீ பண்டாரத்திலிருந்து கல்தச்சன் குடும்பத்திற்கு தேவையான ப்ரசாதத்தை அனுப்பி வைத்தார் .

Advertisements