கோரத மூலை பெயர்க்காரணம்

ஸ்ரீரங்கவாசிகள் அனைவரும் கோரத மூலை என்னும் இடத்தை கேள்விப்பட்டிருப்பர்.அதற்கான பெயர்க்காரணம்

ராமானுசர் தினமும் திருக்கொட்டாரத்துக்குச் சென்று அங்குள்ள பசுக்களைத் தம்முடைய திருக்கையால் தடவிக்கொடுப்பார் .அப்பொது பசுக்களுக்கு ஏதேனும் வ்யாதி இருந்தால் உடனே கண்டு பிடித்திடுவார் .வ்யாதியால் அவதியுறும் பசுக்களுக்கு கோபாலர்களைக் கொண்டு மருத்துவ சிகிச்சை அளித்திடுவார் .நோயினால் விலகிய பசுக்களின் எண்ணிக்கையை சரி செய்வதற்காக ஸ்ரீரங்கம் கீழச் சித்திரை வீதியில் உள்ள கோசாலையிலிருந்து மாற்றுப்பசுக்களை ஏற்பாடு செய்வார் ராமானுசர் .இந்த நிகழ்ச்சி நமக்கெல்லாம் ராமானுசரின் பரந்த வைத்ய சாஸ்த்ர அறிவையும் , வருமுன் காக்கும் திறனையும் நன்கு புலப்படுத்துகிறது .

கோசாலை வட கிழக்கு மூலையில் இருந்த காரணத்தால்தான் அந்த இடத்துக்கு கோ மூலை எனப் பெயர் ஏற்பட்டது. பங்குனி உத்ஸவத் தேர் அங்கிருந்து புறப்படுவதால் கோரதம் என்றழைக்கப்படுகிறது.

Advertisements