கம்பரின் கவியமுதம்

அஞ்சிலே ஒன்று பெற்றான்அஞ்சிலே ஒன்றைத்தாவி

அஞ்சிலே ஒன்று ஆறு ஆகஆர் உயிர் காக்க ஏகி

அஞ்சிலே ஒன்று பெற்ற

அணங்கைக்கண்டு அயலார் ஊரில்அஞ்சிலே ஒன்றை வைத்தான்அவன் நம்மை அளித்துக்காப்பான்

பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய வாயுதேவனுக்குப்பிறந்த அனுமன்

பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய ஆகாயமார்க்கமாகப்

பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய நீரைக் (கடலைக்)கடந்து சிறந்த உயிரைக்காக்கும் பொருட்டு சென்று
பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய பூமிதேவி பெற்ற தெய்வமாதை(சீதாதேவியை)பார்த்து சத்ருக்களின்இலங்கைமாநகரில் பஞ்ச பூதங்களில் ஒன்றாகிய தீயை வைத்தான்.

அவன் நம் எல்லோரையும் கருணையுடன் காப்பாற்றுவான்.

Advertisements