ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
கோயிலொழுகு (திருவரங்கம் பெரியகோயில் வரலாறு)
7ஆம் பகுதி-(2 பாகங்கள்) வெளியீட்டு விழா
சென்ற 6 ஆண்டுகளாக திருவரங்கம்பெரியகோயில் வரலாறு, 6 பகுதிகள், 16 பாகங்கள் (6000 பக்கங்கள்) வெளி வந்துள்ளன. கோயிலொழுகின் இறுதிப் பகுதியான 7ஆம் பகுதி 2 பாகங்கள் (1000 பக்கங்கள்) வெளியீட்டு விழா கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரலின்படி நடைபெறவுள்ளது.
நாள்-18-3-2011. வெள்ளிக்கிழமை. நேரம்-மாலை 4 மணியளவில்.
இடம்: வடக்குச் சித்திரை வீதி நாதமுனி ராமானுஜகூடம், திருவரங்கம்.

வெளியீடு செய்து, பாராட்டுரை வழங்குபவர்: ஸ்ரீ.உ.வே. பெரியநம்பி சுந்தரராஜாசார்யர் ஸ்வாமி.
முதல்பிரதியைப்பெற்றுக் கொள்பவர்: கைங்கர்ய ஸ்ரீமான். ஆடிட்டர் ராமச்சந்திரன்.

பாராட்டுரை வழங்குபவர்கள்: 1) மதுரைப் பேராசிரியர். ஸ்ரீ.உ.வே. இரா. அரங்கராஜன், ஆய்வாளர், ‘நம்பிள்ளை உரைத்திறன்’-நூலாசிரியர், 2) ‘ராமபாணம்’, ‘சார்ங்கவர்ஷம்’-இரும்பாநாடு, ஆழ்வார் அடிப்பொடி-ஸ்ரீ.உ.வே. பத்மநாபன்,-எழுத்தாளர்,  3) தொல்பொருள் ஆய்வாளர்- காட்டூர் பழங்காசு. ப. ஸ்ரீனிவாசன், நிறுவனர்-திருச்சிராப்பள்ளி நாணயவியல் சங்கம்,

 

4) சென்னை, முனைவர். திரு. கல்யாணராமன், Asian Development Bank , Director Saraswathi River Research Centre, Chennai, 5)  கன்யாகுமரி, அரவிந்தன் நீலகண்டன்,Breaking India 6) Bangalore,  ஜடாயு என்கிற சங்கரநாராயணன்Webmaster ‘tamilhindu.com’, website  ஆகியோர்.

பகுதி 7 (2 பாகங்கள்) விலை- ரூ. 500/- (1000 பக்கங்கள்). தபாற் செலவு தனி. (ரூ. 50) 18-3-2011 தொடங்கி 30-4-2011 வரை ரூ. 400/- சலுகை விலையில் அளிக்கப்படவுள்ளது. மேலும் கோயிலொழுகின் 7 பகுதி, 18 பாகங்கள் அனைத்தையும் ஒரு சேர வாங்குவோருக்கு மொத்த விலையான ரூ. 3000 இல் 20%  தள்ளுபடி செய்யப்பட்டு (ரூ. 600/-) ரூ. 2400/-க்கு விற்பனை செய்யப்படும். தபாற்செலவு தனி. கோயிலொழுகு 7 பகுதிகளின் நிறைவு விழாவையொட்டி, ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ மற்றும் Blaze Nights நாட்டியப்பள்ளி, ஸ்ரீரங்கம் இணைந்து வழங்கும் கலைமாமணி சென்னை, கலைமாமணி ஜாகீர் உசேன்  குழுவினரின் ‘தசாவதாரம்’ மற்றும் ‘இராமானுச வைபவம்’ நாட்டிய நாடகங்கள், தெற்குச் சித்திரை வீதி மேலைப் பகுதியில் 19-3-2011, சனிக்கிழமை மாலை 7 மணியளவில் நடைபெறவுள்ளது. அனைவரும் நூல்வெளியீட்டு விழாவிற்கும், நாட்டிய விழாவிற்கும் வருகை தந்து சிறப்பித்திட வேண்டுகிறோம்.
இன்னணம்,
ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ.கிருஷ்ணமாசார்யர்

Advertisements