அனுப்புனர் கடித எண் 28. தேதி. 21.9.2011
 அ. கிருஷ்ணமாசார்யர்,
 ஆசிரியர் பாஞ்சஜன்யம், 
 செயலாளர் திவ்யதேச பாரம்பரியப் பாதுகாப்புப் பேரவை,
 214, கீழை உத்தர வீதி,
 திருவரங்கம்.
பெறுனர்
 செயல் அலுவலர்/ இணைஆணையர்,
 அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில்,
 திருவரங்கம்.
திரு. இணைஆணையர் அவர்களுடைய மேலான கவனத்திற்கு,
 திருவரங்கம் பெரியகோயிலில் இராமாநுசர் ஏற்படுத்தி வைத்த முறைப்படி நடக்கும் ஆராதனங்கள் மற்றும் விழாக்கள் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும், அவை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அவர்கள் தம்முடைய ந.க.எண். 32310/2011/யு3/ நாள். 11.08.2011 தேதியிட்ட கடித எண்ணில் குறிப்பிட்டுள்ளார். 
 புரட்டாசி சனிக்கிழமைகளில் விச்வரூபம் நடைபெறாமல் இருப்பதும், காலை 5 மணிக்கு பொங்கல், பெரிய அவசரம், க்ஷீரான்னம் ஆகிய தளிகைகளை ஸமர்ப்பித்திடுவதும் ஆகம விரோதச் செயல்களாகும். இராமானுசர் எற்படுத்தி வைத்த முறைகளுக்கு மாறான பூஜைகளாகும். இது பற்றி சென்ற ஆண்டே நான் என்னுடைய எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளேன். ஆணையர் அவர்கள் திருக்கோயில் வழிபாட்டு முறைகளில் மாற்றங்கள் ஏதேனும் நடைபெறவில்லை, நடைபெறவும் அனுமதிக்கப்பட மாட்டாது என்று எழுத்து மூலம் மாண்புமிகு முதலமைச்சர் தனிப்பிரிவிலிருந்து அனுப்பப்பட்ட கடிதத்திற்கு பதிலளித்திருப்பதால் அந்த உறுதிமொழியைக் காப்பாற்ற வேண்டியது உங்களது கடமையாகும். ஆகவே தீபாவளியன்று திரையரங்குகளில் காலை 6 மணி முதல் இரவு 1 மணி வரை இடைவெளியின்றி திரைப்படங்கள் திரையிடப்படுவது போல் ஸ்ரீரங்கநாதர் திருக் கோயிலை மாற்றிடாது அங்கே உறைபவன் பரமாத்மா என்ற எண்ணத்தோடு ஆராதனங்களை சனிக் கிழமைகளில் ஆகம விதி வழுவாது மேற்கொண்டிட ஆவன செய்ய வேண்டுகிறேன். 
இணைப்பு. 
கடித எண்ந.க.எண். 32310/2011/யு3/ நாள். 11.08.2011-நகல் 
 இப்படிக்கு,
	

 அ. கிருஷ்ணமாசார்யர்.
நகல் இணைப்புடன்:
1) மாண்புமிகு முதலமைச்சரின் தனிப்பிரிவு, புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை.
2) ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, சென்னை.
Advertisements