சந்ததியில்லா மனைமகள் போலே

       தடமுலையில்லா மடமகள் போலே

செந்தணலில்லா ஆகுதி போலே

      தேசிகனில்லா ஓதுகை போலே

சந்திரனில்லாத் தாரகை போலே

      இந்திரனில்லா உலகம் போலே

எங்கள் இராமானுசமுனி போனால்

     இப்புவி தான் இனி எப்படி யாமோ?

திக்கு நோக்கித் திரும்பித் திரும்பியே

தேவராசர் தம் கோயிலை நோக்கியே

செக்கர் மேனி மிகப் பெருங் கைகளால்

சோர்ந்த கண்கள் பனி நீர் தெளித்திட

மிக்க கோயில் பெருவழி தன்னிலே

வேதம் வல்ல மறையோர்கள் தம்முடன்

புக்ககத்துக்குப் போகிற பெண்கள் போல்

போயினார் பெரும் பூதூர் முனிவனார்

Advertisements