(சொல்=8) + (பொருள்=1) =9

மந்திரம் என்றால் சொல் ரூபமாயிருப்பது மட்டுமின்றி கோயில் ரூபமாயிருப்பதும் ஆகும்.ஆதலால் ஆலயங்களும் மந்திரங்கள் என்று காட்டப்படுகிறது.

திருமந்திரம் 8 எழுத்து + கடவுள்1 =9

ஸ்ருதிகள் 108 = 1+0+8 = 9

ஸ்ம்ருதிகள் 108 = 1+0+8 = 9

புராணங்கள் 18 = 1+8 = 9

பாரதப் போர் நாள்கள்  18 = 1+8 = 9

கீதையின் அத்யாயங்கள் 18 = 1+8 = 9

விஷ்ணுவாலயங்கள் (திவ்யதேசங்கள்) 108 = 1+0+8 = 9

சிவலிங்கங்கள் 1008 = 1+0+0+8 = 9

அண்டங்கள் 1008 = 1+0+0+8 = 9

மேற்கூறிய தொகைகள் ஆரம்பத்தில் 8 என்ற சொல்லில் முடிகின்றன.ஆனால் இத்தொகைகளைக் கூட்டியோ ,பெருக்கியோ,கழித்தோ , வகுத்தோ என்ன செய்தாலும் கடைசியில் நிற்பது 9 ஆகத் தான் இருக்கிறது.

இதனால் நவமியில் பிறந்த ஸ்ரீ ராமரும் அஷ்டமியில் பிறந்த ஸ்ரீ கிருஷ்ணரும் “ஏகமேவ அத்விதீயம்” என்கிறபடி அப்பரம்பொருள் யாரெனத் தெளியலாம்

 

Advertisements