ராமானுசரை பற்றிய தனிப் பாடல்கள்

சந்ததியில்லா மனைமகள் போலே

       தடமுலையில்லா மடமகள் போலே

செந்தணலில்லா ஆகுதி போலே

      தேசிகனில்லா ஓதுகை போலே

சந்திரனில்லாத் தாரகை போலே

      இந்திரனில்லா உலகம் போலே

எங்கள் இராமானுசமுனி போனால்

     இப்புவி தான் இனி எப்படி யாமோ?

திக்கு நோக்கித் திரும்பித் திரும்பியே

தேவராசர் தம் கோயிலை நோக்கியே

செக்கர் மேனி மிகப் பெருங் கைகளால்

சோர்ந்த கண்கள் பனி நீர் தெளித்திட

மிக்க கோயில் பெருவழி தன்னிலே

வேதம் வல்ல மறையோர்கள் தம்முடன்

புக்ககத்துக்குப் போகிற பெண்கள் போல்

போயினார் பெரும் பூதூர் முனிவனார்

Advertisements

Different Types of Ekadasi

Tags

, , , , , ,

பல விதமான ஏகாதசிகள்

ஒவ்வொரு மாதத்திலும் 2 முறை ஏகாதசி வரும்.ஒன்று கிருஷ்ண பக்ஷத்திலும் (தேய்பிறை),மற்றொன்று சுக்லபக்ஷத்திலும்(வளர்பிறை) வரும்.சுக்லபக்ஷம் என்பது அமாவாசையிலிருந்து பௌர்ணமிக்கு முனிதினம் வரை உள்ள 15 நாட்கள்.கிருஷ்ணபக்ஷம் என்பது பௌர்ணமியிலிருந்து அமாவாசைக்கு முன்தினம் வரையிலான 15 நாட்கள்.

24 மணி நேரம் கொண்ட ஒரு நாளுக்கு திதி என்று பெயர்.அமாவாசை அல்லது பௌர்ணமிக்கு பிறகு வரும் முதல் நாள் ,இரண்டாம் நாள் என பதினைந்து நாட்கள் வரை உள்ள தினங்கள் ஸம்ஸ்க்ருதத்தில் கீழ்க்கண்டவாறு அழைக்கப்படுகின்றன.
1.பிரதமை
2.துவிதீயை
3.திருதீயை
4.சதுர்த்தி
5.பஞ்சமி
6.ஷஷ்டி
7.ஸப்தமி
8.அஷ்டமி
9.நவமி
10.தசமி
11.ஏகாதசி
12.துவாதசி
13.திரயோதசி
14.சதுர்தசி
15.அமாவாசை அல்லது பௌர்ணமி

ஏகாதசி மாதம் இருமுறை என்ற கணக்கில் பன்னிரண்டு மாதங்கள் கொண்ட வருடம் ஒன்றுக்கு 24 முறை வரும்.எனினும் வருடத்திற்கு 365 நாட்கள் இருப்பதால் 24 ஏகாதசிகள் கழிந்த பின் சில நாட்கள் எஞ்சி நிற்கும்.இதனால் சில வருடங்களில் 25 ஏகாதசிகள் வரும்.பத்ம புராணத்தில் உத்தரகாண்டத்தில் 25 முறை வரும் ஏகாதசி உபவாசத்திற்கும் தனித்தனி பெயர் சொல்லி அதை அனுஷ்டிக்க வேண்டிய முறை அதனால் பிரயோஜனமடைந்தவர்கள் விபரம் ஆகியவற்றை விளக்கமாகக் கூறியிருக்கிறது.ஏகாதசியின் பெயர்கள் மற்றும் அவைகள் வரும் மாதங்களும் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.

1.மார்கழி மாத கிருஷ்ணபக்ஷ ஏகாதசி – உத்பத்தி ஏகாதசி
2.மார்கழி மாத சுக்லபக்ஷ ஏகாதசி – வைகுண்ட ஏகாதசி (மோக்ஷ ஏகாதசி)
3.தை மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசி – ஸபலா ஏகாதசி
4.தை மாத சுக்லபக்ஷ ஏகாதசி – புத்ரதா ஏகாதசி
5.மாசி மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசி – ஷட்திலா ஏகாதசி (மோக்ஷ ஏகாதசி)
6.மாசி மாத சுக்லபக்ஷ ஏகாதசி – ஜயா ஏகாதசி
7.பங்குனி மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசி – விஜயா ஏகாதசி (மோக்ஷ ஏகாதசி)
8.பங்குனி மாத சுக்லபக்ஷ ஏகாதசி – ஆமலகி ஏகாதசி
9.சித்திரை மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசி – பாபமோசனிகா ஏகாதசி
10.சித்திரை மாத சுக்லபக்ஷ ஏகாதசி – காமதா ஏகாதசி
11.வைகாசி மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசி – வரூதினி ஏகாதசி
12.வைகாசி மாத சுக்லபக்ஷ ஏகாதசி – மோஹினி ஏகாதசி
13.ஆனி மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசி – அபரா ஏகாதசி
14.ஆனி மாத சுக்லபக்ஷ ஏகாதசி – நிர்ஜலா ஏகாதசி
15.ஆடி மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசி – யோகினி ஏகாதசி
16.ஆடி மாத சுக்லபக்ஷ ஏகாதசி – சயன ஏகாதசி( ஸ்ரீ மஹா விஷ்ணு சயனிக்கும் நாள்)
17.ஆவணி மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசி -காமிகா ஏகாதசி
18.ஆவணி மாத சுக்லபக்ஷ ஏகாதசி – புத்ரதா ஏகாதசி
19.புரட்டாசி மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசி – அஜா ஏகாதசி
20.புரட்டாசி மாத சுக்லபக்ஷ ஏகாதசி – பத்மநாப ஏகாதசி
21.ஐப்பசி மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசி – இந்த்ர ஏகாதசி
22.ஐப்பசி மாத சுக்லபக்ஷ ஏகாதசி – பாபாங்குசா ஏகாதசி
23.கார்த்திகை மாத கிருஷ்ண பக்ஷ ஏகாதசி – ரமா ஏகாதசி
24.கார்த்திகை மாத சுக்லபக்ஷ ஏகாதசி – பிரபோதினி ஏகாதசி
25.கமலா ஏகாதசி

In reality, Udayavar Thittam is followed only in Breach

அனுப்புனர் கடித எண் 28. தேதி. 21.9.2011
 அ. கிருஷ்ணமாசார்யர்,
 ஆசிரியர் பாஞ்சஜன்யம், 
 செயலாளர் திவ்யதேச பாரம்பரியப் பாதுகாப்புப் பேரவை,
 214, கீழை உத்தர வீதி,
 திருவரங்கம்.
பெறுனர்
 செயல் அலுவலர்/ இணைஆணையர்,
 அருள்மிகு அரங்கநாதர் திருக்கோயில்,
 திருவரங்கம்.
திரு. இணைஆணையர் அவர்களுடைய மேலான கவனத்திற்கு,
 திருவரங்கம் பெரியகோயிலில் இராமாநுசர் ஏற்படுத்தி வைத்த முறைப்படி நடக்கும் ஆராதனங்கள் மற்றும் விழாக்கள் பேணிப் பாதுகாக்கப்பட்டு வருவதாகவும், அவை இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் அவர்கள் தம்முடைய ந.க.எண். 32310/2011/யு3/ நாள். 11.08.2011 தேதியிட்ட கடித எண்ணில் குறிப்பிட்டுள்ளார். 
 புரட்டாசி சனிக்கிழமைகளில் விச்வரூபம் நடைபெறாமல் இருப்பதும், காலை 5 மணிக்கு பொங்கல், பெரிய அவசரம், க்ஷீரான்னம் ஆகிய தளிகைகளை ஸமர்ப்பித்திடுவதும் ஆகம விரோதச் செயல்களாகும். இராமானுசர் எற்படுத்தி வைத்த முறைகளுக்கு மாறான பூஜைகளாகும். இது பற்றி சென்ற ஆண்டே நான் என்னுடைய எதிர்ப்பினைத் தெரிவித்துள்ளேன். ஆணையர் அவர்கள் திருக்கோயில் வழிபாட்டு முறைகளில் மாற்றங்கள் ஏதேனும் நடைபெறவில்லை, நடைபெறவும் அனுமதிக்கப்பட மாட்டாது என்று எழுத்து மூலம் மாண்புமிகு முதலமைச்சர் தனிப்பிரிவிலிருந்து அனுப்பப்பட்ட கடிதத்திற்கு பதிலளித்திருப்பதால் அந்த உறுதிமொழியைக் காப்பாற்ற வேண்டியது உங்களது கடமையாகும். ஆகவே தீபாவளியன்று திரையரங்குகளில் காலை 6 மணி முதல் இரவு 1 மணி வரை இடைவெளியின்றி திரைப்படங்கள் திரையிடப்படுவது போல் ஸ்ரீரங்கநாதர் திருக் கோயிலை மாற்றிடாது அங்கே உறைபவன் பரமாத்மா என்ற எண்ணத்தோடு ஆராதனங்களை சனிக் கிழமைகளில் ஆகம விதி வழுவாது மேற்கொண்டிட ஆவன செய்ய வேண்டுகிறேன். 
இணைப்பு. 
கடித எண்ந.க.எண். 32310/2011/யு3/ நாள். 11.08.2011-நகல் 
 இப்படிக்கு,
	

 அ. கிருஷ்ணமாசார்யர்.
நகல் இணைப்புடன்:
1) மாண்புமிகு முதலமைச்சரின் தனிப்பிரிவு, புனித ஜார்ஜ் கோட்டை, சென்னை.
2) ஆணையர், இந்து சமய அறநிலையத்துறை, சென்னை.