Panchajanyam December 2009

Pancha Dec 2009 1-64

Advertisements

Koilozhugu Part 7 release

ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுநயே நம:
கோயிலொழுகு (திருவரங்கம் பெரியகோயில் வரலாறு)
7ஆம் பகுதி-(2 பாகங்கள்) வெளியீட்டு விழா
சென்ற 6 ஆண்டுகளாக திருவரங்கம்பெரியகோயில் வரலாறு, 6 பகுதிகள், 16 பாகங்கள் (6000 பக்கங்கள்) வெளி வந்துள்ளன. கோயிலொழுகின் இறுதிப் பகுதியான 7ஆம் பகுதி 2 பாகங்கள் (1000 பக்கங்கள்) வெளியீட்டு விழா கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரலின்படி நடைபெறவுள்ளது.
நாள்-18-3-2011. வெள்ளிக்கிழமை. நேரம்-மாலை 4 மணியளவில்.
இடம்: வடக்குச் சித்திரை வீதி நாதமுனி ராமானுஜகூடம், திருவரங்கம்.

வெளியீடு செய்து, பாராட்டுரை வழங்குபவர்: ஸ்ரீ.உ.வே. பெரியநம்பி சுந்தரராஜாசார்யர் ஸ்வாமி.
முதல்பிரதியைப்பெற்றுக் கொள்பவர்: கைங்கர்ய ஸ்ரீமான். ஆடிட்டர் ராமச்சந்திரன்.

பாராட்டுரை வழங்குபவர்கள்: 1) மதுரைப் பேராசிரியர். ஸ்ரீ.உ.வே. இரா. அரங்கராஜன், ஆய்வாளர், ‘நம்பிள்ளை உரைத்திறன்’-நூலாசிரியர், 2) ‘ராமபாணம்’, ‘சார்ங்கவர்ஷம்’-இரும்பாநாடு, ஆழ்வார் அடிப்பொடி-ஸ்ரீ.உ.வே. பத்மநாபன்,-எழுத்தாளர்,  3) தொல்பொருள் ஆய்வாளர்- காட்டூர் பழங்காசு. ப. ஸ்ரீனிவாசன், நிறுவனர்-திருச்சிராப்பள்ளி நாணயவியல் சங்கம்,

 

4) சென்னை, முனைவர். திரு. கல்யாணராமன், Asian Development Bank , Director Saraswathi River Research Centre, Chennai, 5)  கன்யாகுமரி, அரவிந்தன் நீலகண்டன்,Breaking India 6) Bangalore,  ஜடாயு என்கிற சங்கரநாராயணன்Webmaster ‘tamilhindu.com’, website  ஆகியோர்.

பகுதி 7 (2 பாகங்கள்) விலை- ரூ. 500/- (1000 பக்கங்கள்). தபாற் செலவு தனி. (ரூ. 50) 18-3-2011 தொடங்கி 30-4-2011 வரை ரூ. 400/- சலுகை விலையில் அளிக்கப்படவுள்ளது. மேலும் கோயிலொழுகின் 7 பகுதி, 18 பாகங்கள் அனைத்தையும் ஒரு சேர வாங்குவோருக்கு மொத்த விலையான ரூ. 3000 இல் 20%  தள்ளுபடி செய்யப்பட்டு (ரூ. 600/-) ரூ. 2400/-க்கு விற்பனை செய்யப்படும். தபாற்செலவு தனி. கோயிலொழுகு 7 பகுதிகளின் நிறைவு விழாவையொட்டி, ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ மற்றும் Blaze Nights நாட்டியப்பள்ளி, ஸ்ரீரங்கம் இணைந்து வழங்கும் கலைமாமணி சென்னை, கலைமாமணி ஜாகீர் உசேன்  குழுவினரின் ‘தசாவதாரம்’ மற்றும் ‘இராமானுச வைபவம்’ நாட்டிய நாடகங்கள், தெற்குச் சித்திரை வீதி மேலைப் பகுதியில் 19-3-2011, சனிக்கிழமை மாலை 7 மணியளவில் நடைபெறவுள்ளது. அனைவரும் நூல்வெளியீட்டு விழாவிற்கும், நாட்டிய விழாவிற்கும் வருகை தந்து சிறப்பித்திட வேண்டுகிறோம்.
இன்னணம்,
ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ.கிருஷ்ணமாசார்யர்

Koyilozhugu part 7 release

ஸ்ரீ:
கோயிலொழுகு (திருவரங்கம் பெரியகோயில் வரலாறு)
7ஆம்பகுதி ( 2பாகங்கள் ) வெளியீட்டு விழா
சென்ற 6 ஆண்டுகளாக திருவரங்கம் பெரியகோயில் வரலாறு,6 பகுதிகள், 16 பாகங்கள் (6000 பக்கங்கள்) வெளிவந்துள்ளன. கோயிலொழுகின் இறுதிப் பகுதியான 7ஆம் பகுதி 2 பாகங்கள் (1000 பக்கங்கள்) வெளியீட்டு விழா கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரலின்படி நடைபெறவுள்ளது.
நாள்-18-3-2011. வெள்ளிக்கிழமை. நேரம்-மாலை 4 மணியளவில்.
இடம்: நாதமுனி ராமானுஜகூடம்,
வடக்குச் சித்திரை வீதி  திருவரங்கம்.

வெளியீடு செய்து, பாராட்டுரை வழங்குபவர்:
ஸ்ரீ.உ.வே. பெரியநம்பி சுந்தரராஜாசார்யர் ஸ்வாமி.
முதல் பிரதியைப் பெற்றுக் கொள்பவர்:
கைங்கர்ய ஸ்ரீமான். ஆடிட்டர் ராமச்சந்திரன்.

பாராட்டுரை வழங்குவோர்:
1) மதுரைப் பேராசிரியர். ஸ்ரீ.உ.வே. இரா. அரங்கராஜன், ஆய்வாளர், ‘நம்பிள்ளை உரைத்திறன்’-நூலாசிரியர், 2) ‘ராமபாணம்’,‘சார்ங்கவர்ஷம்’-இரும்பாநாடு, ஆழ்வார்அடிப்பொடி-ஸ்ரீ.உ.வே. பத்மநாபன்-எழுத்தாளர், 3)தொல்பொருள் ஆய்வாளர்- காட்டூர் பழங்காசு. ப. ஸ்ரீனிவாசன், நிறுவனர்-திருச்சிராப்பள்ளி நாணயவியல் சங்கம், 4) சென்னை, முனைவர். திரு. கல்யாணராமன்,முன்னாள் Director Saraswathi River Research Project 5) கன்யாகுமரி, அரவிந்தன் நீலகண்டன், Breaking India என்ற ஆய்வு நூலின் இணை ஆசிரியர், 6)  ஜடாயு என்கிற சங்கரநாராயணன், thamilhindu.com ஆகியோர்.

Sri Vaishnava Rituals to be followed upon the death of a Sri Vaishnava

 • ஒருவர் இறந்தபின் நடத்தப்படவேண்டிய காரியங்கள்:
  1. தஹனம்
  2. சஞ்சயனம்
  3. நக்னச்ராத்தம்
  4. பாஷாண ஸ்தாபனம்
  5. நித்யவிதி
  6. ஏகோத்ர வ்ருத்தி ச்ராத்தம்
  7. நவச்ராத்தம்
  8. பங்காளி தர்பணம்
  9. ப்ரபூதபலி
  10. பாஷாண உத்தாபனம்
  11. சாந்தி, ஆனந்த ஹோமம்
  12. வ்ருஷப உத்ஸர்ஜனம்
  13. ஏகாதச ப்ராஹ்மண               போஜனம்
  14. ஆத்ய மாஸிகம்
  15. ஆவ்ருதாத்ய மாஸிகம்
  16. ஷோடசம்
  17. ஸபிண்டீகரணம்
  18. ஆத்ய ஸோதகும்பம்
  19. இயல் ஸேவாகாலம்
  20. சுப ஸ்வீகாரம்

  தஹன தின க்ரியைகள்

  பலர் அசுப காரியங்களைப் பற்றி பேசுவது, தெரிந்து கொள்வதைக் கூட தவறாக நினைக்கிறார்கள். தினமும் அபர காரியங்களில் ஈடுபடும் வாத்யார்கள், பிணம் சுமப்பவர்கள், பிண ஊர்தி ஓட்டுகிறவர்கள் போன்றோர்கள் இல்லத்தில் எந்த பாதிப்பும் இல்லாமல் நன்றாகவே இருக்கிறார்கள். அதனால்  ஒருவர் இதுபற்றி  அறியாமலே இருந்து இதிலிருந்து தப்பித்துக்கொள்ள முடியாது என்பதைத் தெரிந்து கொள்ளவேண்டும்.
  தஹனம் :- இறந்தவருக்குச் செய்யப்படும் முதல் நாள் க்ரியைகள். மரணத்தால் ஆன்மாவை விட்டுப் பிரிந்த சரீரத்திற்காகச் செய்யப்படும் கர்மா.
  ஜீவ ப்ராயச்சித்தம்
  சாமான்களும் – ஏற்பாடுகளும்
  ஸ்ரீசூர்ண பரிபாலனம்
  அக்நி நிர்ணயம், ப்ரேதாக்நி ஸந்தானம்
  உத்தபனாக்னி, கபாலாக்னி ஸந்தானம்
  பைத்ருமேதிக, ப்ராயச்சித்தாதி ஹோமங்கள்
  ஸ்மஸானத்தில் க்ரியைகள்
  தஹனத்தின் பின் செய்ய வேண்டியவை
  சஞ்சயன சாமான்கள், ஏற்பாடுகள்
  எம்மால் இயன்ற உதவிகள்

  சஞ்சயனம் : தஹனத்தின் பிறகு எஞ்சிய சரீரத்தின் பாகங்களை முறைப்படி இறுதி செய்வது.

  • அக்நி நஷ்ட ப்ராயச்சித்தம்
  • குக்குட ச்ருகாளாதி ஸ்பர்ச ப்ராயச்சித்தம்
  • அஸ்தி ஸஞ்சயனம்
  • அஸ்தி நிக்ஷேபணம்

  • நக்ன ச்ராத்தம் : இறந்தவருக்கு ஏற்படும் ஐந்துவிதமான பாதிப்புகளிலிருந்து விமோசனம் ஏற்பட செய்யப்படுவது.
   பாஷாண ஸ்தாபனம் : தடாகதீரம், க்ருஹத்வாரம் என இரு இடங்களில் சிறு குண்டம் அமைத்து ஆன்மாவை கல்லில் ஆவாஹனம் செய்வது.
   நித்யவிதி : ஆவாஹனம் செய்யப்பட்ட ஆன்மாவிற்கு தினமும் வாஸ உதகம், தில உதகம், பிண்டங்கள் ஸமர்ப்பிப்பது.
   ஏகோத்திர வ்ருத்தி ச்ராத்தம் :- பத்தாம் நாள் வரை தினமும் பண்ணவேண்டிய ச்ராத்தம்.
   நவ ச்ராத்தம் :- பதினொன்றாம் நாள் வரை 1, 3, 5, 7, 9, 11 ஆகிய ஒற்றைப்படை நாட்களில் பண்ண வேண்டிய ச்ராத்தம்.
   10ம்நாள் பங்காளி தர்ப்பணம் : பத்துநாள் பங்காளிகள் காரியம் நடக்கும் இடத்திற்கு வந்து 10 நாளைக்கும் சேர்த்து தர்ப்பிக்கவேண்டும்.
   க்ஷவரம் :- இறந்தவரைவிட வயதில் சிறிய பங்காளிகள் க்ஷவரம் பண்ணிக்கொண்டு தர்ப்பிக்கவேண்டும்.  கர்தாக்கள் பிறகு…
   ப்ரபூதபலி: ஒரு படி சாதம், 5அடை, உருண்டை, அகத்திக்கீரை, …. இவைகளை படைத்து உபசரிப்பது.
   சுமங்கலி விஷயம் :-  இறந்தவர் சுமங்கலியானால் பலியில் சில விசேஷங்கள்.
   புடவை போடுவது:- கணவருக்கு நடக்கும் பத்தாம் நாள் க்ருத்யத்தில் உயிருடன் இருக்கும் மனைவிக்கு புடவை போடுவபற்றி
   பாஷண உத்தாபனம் : ஆன்மாவை யதாஸ்தானம் பண்ணி கல்லை எடுப்பது.
   பலியை ஜலத்தில் சேர்ப்பது, கர்த்தாக்கள் க்ஷவரம் :-
   சாந்தி, ஆனந்த ஹோமம் :-
   சாரு ஸம்பாவனை, அப்பம் பொரி ஓதியிடுதல்:
   11ம் நாள் :- புண்யாஹம், நவச்ராத்தம், வ்ருஷப உத்ஸர்ஜனம், ஆத்ய மாஸிகம், ஆவ்ருத்தாத்ய மாஸிகம் இத்யாதிகள்
   12ம் நாள் : புண்யாஹம், ஒளபாஸனம், சோடசம், ஸபிண்டீகரணம், தானங்கள், சோதகும்பம்.
   ஸேவா காலம் : வேத, ப்ரபந்த பாராயணங்கள்
   13ம் நாள் : ஸேவை, சாத்துமுறை, உபந்யாஸம்,
   சுப ஸ்வீகாரம்
   ஊனங்கள், மாஸ்யங்கள் : நாட்கள் குறிக்க உதவி
   புண்யகால தர்ப்பணங்கள்: பண்ணவேண்டியவை
   வருஷாப்தீகம்: ஆப்தீக வழிமுறைகள்
   வருஷாப்தீக ததியாராதனம் : பற்றிய விளக்கம்


  10ம்நாள் பங்காளி தர்ப்பணம் : பத்துநாள் பங்காளிகள் காரியம் நடக்கும் இடத்திற்கு வந்து 10 நாளைக்கும் சேர்த்து தர்ப்பிக்கவேண்டும்.
  க்ஷவரம் :- இறந்தவரைவிட வயதில் சிறிய பங்காளிகள் க்ஷவரம் பண்ணிக்கொண்டு தர்ப்பிக்கவேண்டும்.  கர்தாக்கள் பிறகு…
  ப்ரபூதபலி: ஒரு படி சாதம், 5அடை, உருண்டை, அகத்திக்கீரை, …. இவைகளை படைத்து உபசரிப்பது.
  சுமங்கலி விஷயம் :-  இறந்தவர் சுமங்கலியானால் பலியில் சில விசேஷங்கள்.
  புடவை போடுவது:- கணவருக்கு நடக்கும் பத்தாம் நாள் க்ருத்யத்தில் உயிருடன் இருக்கும் மனைவிக்கு புடவை போடுவபற்றி
  பாஷணாண உத்தாபனம் : ஆன்மாவை யதாஸ்தானம் பண்ணி கல்லை எடுப்பது.
  பலியை ஜலத்தில் சேர்ப்பது, கர்த்தாக்கள் க்ஷவரம் :-
  சாந்தி, ஆனந்த ஹோமம் :-
  சாரு ஸம்பாவனை, அப்பம் பொரி ஓதியிடுதல்:

  11ம் நாள் :- புண்யாஹம், நவச்ராத்தம், வ்ருஷப உத்ஸர்ஜனம், ஆத்ய மாஸிகம், ஆவ்ருத்தாத்ய மாஸிகம் இத்யாதிகள்

  12ம் நாள் :

  • புண்யாஹம்,
  • ஒளபாஸனம்,
  • சோடசம்,
  • ஸபிண்டீகரணம்,
  • தானங்கள்,
  • சோதகும்பம்.
  ஸேவா காலம் : சிலர் முதல் நாளே (12ம் நாளே) வேத, ப்ரபந்த பாராயணங்கள் தொடங்கி ஸேவிப்பர்.
  • ஸேவாகாலம் தொடக்கம் அல்லது தொடர்ச்சி
  • இயல் – ஆழ்வார்கோஷ்டி
  • பால் தொடுதல், பிடி சுற்றுதல்
  • சாத்துமுறை
  • சர்மஸ்லோக வ்யாக்யானம், உபந்யாஸம்
  • சுப ஸ்வீகாரம்
  • அக்ஷதை ஆசீர்வாதம்
  • ஹாரத்தி
  12ம் நாள் :

  • புண்யாஹம்,
  • ஒளபாஸனம்,
  • சோடசம்,
  • ஸபிண்டீகரணம்,
  • தானங்கள்,
  • சோதகும்பம்.
  ஸேவா காலம் : சிலர் முதல் நாளே (12ம் நாளே) வேத, ப்ரபந்த பாராயணங்கள் தொடங்கி ஸேவிப்பர்.
  • ஸேவாகாலம் தொடக்கம் அல்லது தொடர்ச்சி
  • இயல் – ஆழ்வார்கோஷ்டி
  • பால் தொடுதல், பிடி சுற்றுதல்
  • சாத்துமுறை
  • சர்மஸ்லோக வ்யாக்யானம், உபந்யாஸம்
  • சுப ஸ்வீகாரம்
  • அக்ஷதை ஆசீர்வாதம்
  • ஹாரத்தி

  Courtesy : Vaideekamdotcom

Ahovin Akramamum Nakkheeranin Nermaiyinmaiyum

Sarngavarsham
Agnihothriyin Akramamum Nakkheeranin Nermaiyinmaiyum

ஆனால் என்ன விபரீதம் என்றால், வேதாத்யயனம் செய்து அக்னி ஹோத்ரி என்ற விருதையும் சுமந்துகொண்டு ஸ்வயமாசார்யர் என்றும் கூறிக் கொண்டு முனித்ரய ஸம்ப்ரதாயம் என்றும் பிதற்றிக் கொண்டு பாபீ சதாயு: என்கிறபடி வாழ்ந்து வைதிக ஸம்ப்ரதாயத்திற்குக் குழி தோண்டியவர் அக்னிஹோத்ரம் ராமாநுஜதாதாசார்யர்.
இவர் முன்பு “வரலாற்றில் பிறந்த வைணவம்” என்ற விஷச் சுவடியை  எழுதி அதை ஸ்ரீசார்ங்கபாணி தேவஸ்தானச் செலவிலே அச்சிட்டு படிப்பார் செவிசுடு கீழ்மை வசவுகளை எழுதி வெளியிட்டார்.  அப்போதே உபயகலை வித்வான்களும் ஒருமுகமாக எதிர்த்து கட்டுரைகள் வரைய அவற்றை ‘அக்னி ஹோத்ரியும் வைணவமும்’ என்ற தொகுப்பு நூலில் ஸ்ரீ.உ.வே. புத்தூர் ஸ்வாமி வெளியிட்டு பரிஹரித்தார். சமீப காலத்தில் நக்கீரன் ஏட்டிற்குப் பேட்டி கொடுப்பதாக அபிநயித்து அருவெறுக்கத்தக்க சொல்வதற்கே நா கூசும் படியான நச்சு விதைகளைத் தூவினார். தம்மை பரம நாஸ்திராக அடையாளம் காட்டிக் கொண்டார். அவருடைய கருத்துக்களைப் முழுமை மாக ஆராய்ந்து நம் அன்பர் ராமபாணம் ஸ்ரீமான். ஸ்ரீ.உ.வே. பத்மநாபன் (இரும்பாநாடு) அவர்கள் தமது கண்டனக்குரலை அவ்வப் போது பாஞ்சஜன்யத்தில் எழுதி வந்தார். அக்கட்டு ரைகளை நூல் வடிவமாகத் திரட்டி இன்று ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ கிருஷ்ண மாசார்யர் வழங்கியுள்ளார். அறிஞர் பெருமக்களே! ஆஸ்திக அன்பர்களே! திருமால் திருநெறிச் செல்வர்களே! விழித்து எழுங்கள். நக்கீரனுக்கு ஓர் எதிர்ச்சீரன் எழுப்பிய வாசகங் களைக் கேட்டு உணர்வு பெற வேண்டுகிறேன். அன்பன். இரா.அரங்கராஜன்.

Panchajanyam Apr 2010 pages 33 – 48

பாஞ்சஜன்யம்
இலக்கியம், வரலாறு, கல்வெட்டுகள், ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தக் கோட்பாடுகள் ஆகிய வற்றைப் பற்றிய கட்டுரைகளோடு, மரபு மீறல் களைக் கண்டித்து எழுதப்பட்ட கட்டுரைகளைக் கொண்ட ஒரு புரட்சிகர மாத இதழ்.
ஆசிரியர்: ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ.கிருஷ்ணமாசர்யர்.

Panchajanyam April 2010 33-48

பாஞ்சஜன்யம் இலக்கியம், வரலாறு, கல்வெட்டு…

பாஞ்சஜன்யம்

இலக்கியம், வரலாறு, கல்வெட்டுகள், ஸ்ரீவைஷ்ணவ சித்தாந்தக் கோட்பாடுகள் ஆகிய வற்றைப் பற்றிய கட்டுரைகளோடு, மரபு மீறல் களைக் கண்டித்து எழுதப்பட்ட கட்டுரைகளைக் கொண்ட ஒரு புரட்சிகர மாத இதழ்.

Panchajanyam April 2010 17-32

ஆசிரியர்: ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ.கிருஷ்ணமாசர்யர்.

Some Details about Bhoopathi (Thai) ThirunaaL Festival in Srirangam

`                                                  ஸ்ரீ:
ஸ்ரீமதே ராமாநுஜாய நம: ஸ்ரீமத் வரவரமுனயே நம:

1) திருவரங்கத்தில் கால வெள்ளத்தில் காணாமற்போன ப்ரஹ்மோத்ஸவங்கள் பல. அவற்றில் குறிப்பிடத் தக்கவை ஐப்பசி ப்ரஹ்மோத்ஸவம், (திருவோணத்தன்று திருத்தேரில் எழுந்தருளிய உத்ஸவம்) முதலாம் சடையவர்மன் சுந்தரபாண்டியன் ஏற்படுத்தி வைத்த சித்திரை ப்ரஹ்மோத்ஸவம், ஆரவீடு அளியராமராஜா வைகாசி மாதத்தில் பூச நக்ஷத்ரத்தில் ஏற்படுத்தி வைத்த ப்ரஹ்மோத்ஸவம், கிருஷ்ணதேவராயர் தன் பெயரில் ஏற்படுத்தி வைத்த மாசி ப்ரஹ்மோத்ஸவம், புரட்டாசியில் ஆதித்யதேவ உடையார் பெயரில் ஏற்படுத்தி வைக்கப்பட்ட ப்ரஹ்மோத்ஸவம் போன்றவை இவையெல்லாம் இன்று வழக்கொழிந்து விட்டன.
2) கால வெள்ளத்தில் எதிர்நீச்சலிட்டு இன்று நிலை கொண்டிருக்கும் ப்ரஹ்மோத்ஸவங்கள் மூன்று. அவையாவன: சித்திரை விருப்பன்திருநாள், தை பூபதித்திருநாள், பங்குனி ஆதிப்ரஹ்மோத்ஸவம் ஆகியவை.

3) திருவுடை மன்னரைக் காணில் திருமாலைக் கண்டேனே என்னும் (திருவாய்மொழி 4-4-8) ஆழ்வாரின்  பாசுர சொற்றொடற்கிணங்க, மன்னர்கள் தங்கள் பிறந்த நக்ஷத்ரத்தில் அழகிய மணவாளனை திருத்தேரில் எழுந்தருளப் பண்ணி ப்ரஹ்மோத்ஸவம் கண்டனர்.

4) அதன்படி விஜயநகர மன்னர்களில் ஒருவரான வீரபூபதிஉடையார் (இவன் விஜயநகர சாம்ராஜ்யத்தைத் தோற்றுவித்த புக்கரின் பேரன்) தன்னுடைய ஜன்ம நக்ஷத்ரமாகிய தை புனர்பூசத்தில் இந்த ப்ரஹ்மோத்ஸவத்தை கி.பி. 1413ஆம் ஆண்டு ஏற்படுத்தி வைத்தான்.
5) இதற்கான கல்வெட்டு ஆதாரம் 2ஆம் திருச்சுற்றான ராஜமகேந்திரன் திருச்சுற்றின் தெற்குப்பக்கச் சுவரில் அமைந்துள்ளது. கல்வெட்டு எண் அ.கீ. Nணி. 59 / 1938-39.
6) இந்தக் கல்வெட்டு 14-7-1413ஆம் நாள் ஏற்படுத்தி வைக்கப்பட்டது.
7) “ விரோதி வருஷம் வைகாசி மாதம் ஜ்யேஷ்ட சுத்த பஞ்சமியும் வெள்ளிக்கிழமையும் அமைந்த நாளில் ஸ்ரீமஹாமண்டலேச்வர வீரபூபதி உடையார் பெருமாள் ஸ்ரீரங்கநாதனுக்கு எழுதிக் கொடுத்த பட்டயம் என்று இந்தக் கல்வெட்டு தொடங்குகிறது.
8) இந்த உத்ஸவத்தைக் கொண்டாடுவதற்காக முதலில் 80 பொன்னும், அதன் பிறகு விஜய வருஷம் 55 பொன்னும் ஸ்ரீபண்டாரத்தில் சேர்ப்பிக்கப்பட்டது.
9) இந்த உத்ஸவத்தை நன்றாக நடத்தி வைக்கும் பொறுப்பு உத்தமநம்பிகளைச் சார்ந்தது என்று இந்தக் கல்வெட்டு கூறுகிறது.
10) இந்த உத்ஸவம் நடைபெறும்போது அரண்மனை அதிகாரிகள் குறுக்கீடு செய்யக்கூடாது என்றும் இதில் கண்டுள்ளது.
11) விருப்பன் திருநாள் போலே இந்த ப்ரஹ்மோத்ஸவத்தைக் கொண்டாட வேண்டும் என்று குறிப்பிடும் இந்தக் கல்வெட்டு வீரபூபதி உடையாரின் விருப்பமாக திருத்தேரிலே  நம்பெருமாள் உபயநாச்சிமார்களோடு எழுந்தருள வேண்டும் என்று தெரிவிக்கிறது. ( விருப்பன்திருநாள் மற்றும் ஆதிப்ரமோத்ஸவத்தில் திருத்தேரில் நம்பெருமாள் மட்டும் எழுந்தருள, தை ப்ரஹ்மோத்ஸவத்தில் உபயநாச்சியமார்களோடு நம்பெருமாள் எழுந்தருள்வதற்குக் காரணம் இதுவேயாகும்)
12) ஸ்ரீமணவாளமாமுனிகள் திருவரங்கத்திற்கு எழுந்தருளிய ஆண்டு கி.பி. 1413. அவருடைய நியமனம் கொண்டு இந்த ப்ரஹ்மோத்ஸவம் ஏற்படுத்தி வைக்கப்பட்டதால் மற்றைய உத்ஸவங்களைவிட இது சிறப்புடைய தாகும்.
13) ஸ்ரீமணவாளமாமுனிகள் ஆழ்வார் திருநகரியில் எழுந்தருளியிருந்த சமயம் ஒரு தை மாசமாகும். தை உத்திரட்டாதியில் கொடியேற்றம் ஆகி, புனர்பூசத்தன்று திருத்தேரில் எழுந்தருளும் இந்த உத்ஸவத்தைத் தாம் இந்த ஆண்டு தை ப்ரஹ்மோத்ஸவத்தை சேவிக்க இயலாது போயிற்றே என்று அவர் அருளிச் செய்த இரங்கற்பா கீழ்க் கண்டவாறு அமைந்துள்ளது “தேவியருந்தாமும் திருத்தேரின் மேலரங்கர் மேவி விக்கிரமன் வீதிதனிற்–சேவை செயுமந்தச் சுவர்க்கத்தையநுபவிக்கப் பெற்றிலமே யிந்தத்திருநாளிலே யாம்”.

தொகுப்பு: ஸ்ரீவைஷ்ணவஸ்ரீ அ.கிருஷ்ணமாசார்யர். ***